Swiss Tamil Events

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2026

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2026

சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் இளையோரும் வளர்ந்தவர்களும் தமது இன அடையாளங்களையும் மாவீரர் தியாகங்களையும் அறிந்துபோற்றுவதற்காகவும் தமது பேச்சாற்றலை வளர்ப்பதற்காகவும் நடாத்தப்பெறும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 14.11.2026 சனிக்கிழமை சூரிச், பேர்ண், லவுசான் ஆகிய மாநிலங்களிலும் 15.11.2026 ஞாயிற்றுக்கிழமை சூரிச் மாநிலத்திலும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

5வயதுப்பிரிவு முதல் 23வயதும் அதற்கு மேற்பட்ட வயதுப்பிரிவுக்குமான பேச்சுப்போட்டியில் 303 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். தாய்மொழி, தாய்நாடு, தமிழீழத்தேசியத் தலைவர், மாவீரர் தியாகம், தாயகம் நோக்கிய இளைய தலைமுறையினரின் செயற்பாடுகள் போன்ற பல்வேறு கருப்பொருள்களைக் கொண்ட பேச்சுகள் போட்டியில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

pechupotti swiss 17 pechupotti swiss 15 pechupotti swiss 14 pechupotti swiss 12 pechupotti swiss 13

அவற்றை மனனம் செய்து பேச்சுக்குரிய உணர்வு, வெளிப்பாடுகளுடன் அரங்கேற்றி தங்களின் பேச்சாற்றலை வெளிப்படுத்தியிருந்தனர். பங்குபற்றிய அனைவருக்கும் நினைவுப்பரிசிலும் சான்றிதழும் வழங்கப்பெற்றது.

வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் எதிர்வரும் 27.11.2026 வெள்ளிக்கிழமை பாசல் மாநிலத்தில் நடைபெறவுள்ள தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் வழங்கப்படும்.

பேச்சுப்போட்டியில் பங்குபற்றிய போட்டியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களை உற்சாகப்படுத்தி பங்குபெறச்செய்த உறவுகளுக்கும் மற்றும் போட்டி சிறப்பாக நடைபெற துணைநின்ற தமிழின உணர்வாளர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.