Local Swiss News

ஷாஃப்ஹவுசனில் டஜன் கணக்கான மின்சார பைக்குகள் மீட்பு! 4 பேர் கைது!

29p 88

ஷாஃப்ஹவுசனில் டஜன் கணக்கான மின்சார பைக்குகள் மீட்பு! 4 பேர் கைது!

ஷாஃப்ஹவுசனில் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டஜன் கணக்கான மின்சார மிதிவண்டிகள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை, சொத்து சேதம் ஏற்பட்டிருக்கலாம் என கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.

29p 88

அங்கு, அடித்தள அறை ஒன்றில் மிதிவண்டிப் பூட்டை உடைக்க முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபர்களை அதிகாரிகள் எதிர்கொண்டனர்.

மேலும், அந்த அறையிலும், அருகிலுள்ள அறைகளிலும், கட்டிடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஏராளமான e-Bikes மற்றும் e-Scooters கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த சூழ்நிலை, அங்கு இருந்தவர்கள் அந்த வாகனங்களை முன்னதாக திருடியிருக்கலாம் என்ற வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் நான்கு சந்தேகநபர்கள் தற்காலிகமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிர்ச்சிகரமாக, போலீசாருக்கு முதலில் தகவல் தெரிவித்த நபரும் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, ஷாஃப்ஹவுசன் அரசு வழக்கறிஞர் அலுவலகம் கைப்பற்றப்பட்ட மின்சார பைக்குகள், மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் அவற்றின் பேட்டரிகளை பறிமுதல் செய்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.