Local Swiss News

ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்த பெண்! பீட்டன்பெர்க்கில் கோர விபத்து…

ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்த பெண்! பீட்டன்பெர்க்கில் கோர விபத்து…

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் உள்ள பீட்டன்பெர்க்கில் இடம்பெற்ற ஸ்கூட்டர் விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்து, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பீட்டன்பெர்க்கிலிருந்து பள்ளத்தாக்கு நிலையத்தை நோக்கி அந்தப் பெண் ஸ்கூட்டரில் பயணம் செய்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

gosimg10RX04b0032080808080000012019fct

இந்த நிலையில், இன்னும் தெளிவாகத் தெரியாத காரணங்களால் ஸ்கூட்டரின் கட்டுப்பாட்டை அவர் இழந்து கீழே விழுந்துள்ளார்.

விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அவசர மருத்துவ உதவிக்காக ரெகா ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டது.

பின்னர், அவரது நிலை கவலைக்கிடமாக இருந்ததால், ரெகா ஹெலிகாப்டர் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மாகாண காவல்துறை மற்றும் ரெகா வான்வழி ஆம்புலன்ஸ் குழுவுடன், ஒரு ஆம்புலன்ஸ் குழுவும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

இதற்கிடையில், விபத்து எவ்வாறு ஏற்பட்டது? ஸ்கூட்டரின் கட்டுப்பாட்டை பெண் ஏன் இழந்தார்? என்பது குறித்து பெர்ன் மாகாண காவல்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது.