“பேருந்து மோதல்… 13 பேர் மருத்துவமனையில்! விபத்துக்கான காரணம் என்ன?”
“பேருந்து மோதல்… 13 பேர் மருத்துவமனையில்! விபத்துக்கான காரணம் என்ன?”

“பேருந்து மோதல்… 13 பேர் மருத்துவமனையில்! விபத்துக்கான காரணம் என்ன?”
சுவிட்சர்லாந்தின் வாலெய்ஸ் மாகாணத்தில் உள்ள ஸ்டால்டன் பகுதியில், செவ்வாய்க்கிழமை காலை இரண்டு சுற்றுலாப் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
முல்லாக்கர்ன் அருகே காலை சுமார் 8.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
31 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சுற்றுலாப் பேருந்து, ஸ்டால்டனில் இருந்து விஸ்ப் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, இதுவரை தெரியாத காரணத்தால் திடீரென எதிர்திசைப் பாதைக்குள் விலகியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
எதிரே வந்த மற்றொரு சுற்றுலாப் பேருந்தின் ஓட்டுநர் மோதலைத் தவிர்க்க முயன்றபோதும், இரண்டு பேருந்துகளும் ஒன்றையொன்று உரசிக்கொண்டன.
இதையடுத்து விஸ்ப் நோக்கிச் சென்ற பேருந்து சாலையை விட்டு விலகி நின்றுள்ளது.

இந்த விபத்தில் 13 பயணிகள் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு சம்பவ இடத்தில் முதலுதவி வழங்கப்பட்ட பின்னர், விஸ்ப் மற்றும் சியோனில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதிர்ஷ்டவசமாக, மற்ற பேருந்தில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
🚑 மீட்புப் பணிகளுக்காக 7 ஆம்புலன்ஸ்களும் 3 மீட்பு ஹெலிகாப்டர்களும் களமிறக்கப்பட்டதுடன், தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
மேலும், சேதமடைந்த பேருந்தை அகற்றும் பணிக்காக பிரதான சாலை தற்காலிகமாக முழுமையாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






