சுவிஸை அதிரவைத்த சைபர் தாக்குதல்! ‘எவரெஸ்ட்’ ஹேக்கர் குழுவின் 10 மில்லியன் பிராங்கு மிரட்டல்!
சுவிஸை அதிரவைத்த சைபர் தாக்குதல்! 'எவரெஸ்ட்' ஹேக்கர் குழுவின் 10 மில்லியன் பிராங்கு மிரட்டல்!

சுவிஸை அதிரவைத்த சைபர் தாக்குதல்! ‘எவரெஸ்ட்’ ஹேக்கர் குழுவின் 10 மில்லியன் பிராங்கு மிரட்டல்!
சுவிட்சர்லாந்தின் முன்னணி ரயில் வாகன உற்பத்தி நிறுவனமான ஸ்டாட்லர், பெரும் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள நிலையில், இணையக் குற்றவாளிகள் 10 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் பிணைத்தொகை கோரி மிரட்டியுள்ளனர்.
ஜூலை மாத நடுப்பகுதியில் நடந்த இந்த இணையத் தாக்குதலுக்கு எவரெஸ்ட் என்ற ஹேக்கர் குழு பொறுப்பேற்றுள்ளது.
ஸ்டாட்லரின் விநியோகஸ்தருடன் தொடர்புடைய தரவுப் பரிமாற்ற அமைப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்து சில தொழில்நுட்பத் தகவல்களை திருடியதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.

ஆனால், நிறுவனத்தின் முக்கிய தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பாதிக்கப்படவில்லை என்றும், ரயில் உற்பத்தி மற்றும் வணிக நடவடிக்கைகள் வழக்கம்போல தொடர்கின்றன என்றும் ஸ்டாட்லர் விளக்கம் அளித்துள்ளது.
“நாங்கள் மிரட்டலுக்கு ஒருபோதும் பணிய மாட்டோம். எந்தச் சூழ்நிலையிலும் பிணைத்தொகை செலுத்த மாட்டோம்” என்று நிறுவனம் உறுதியாக அறிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக துர்காவ் மாகாண காவல்துறையில் குற்றவியல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இணையக் குற்றப் பிரிவு தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகிறது.
இணையத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், நிறுவனங்களின் தரவுப் பாதுகாப்பு மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது.





