Local Swiss News

இன்டர்லேக்கனில் சோகம்! ஆரே ஆற்றில் குதித்த 19 வயது இளைஞர் சடலமாக மீட்பு!

இன்டர்லேக்கனில் சோகம்! ஆரே ஆற்றில் குதித்த 19 வயது இளைஞர் சடலமாக மீட்பு!

இன்டர்லேக்கனில் சோகம்! ஆரே ஆற்றில் குதித்த 19 வயது இளைஞர் சடலமாக மீட்பு!

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் உள்ள இன்டர்லேக்கன் அருகே அமைந்துள்ள ஆரே ஆற்றில் காணாமல் போன 19 வயது இளைஞர், ஐந்து நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

போலந்து நாட்டைச் சேர்ந்த அந்த இளைஞர், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை பியூரிவேஜ் Beaurivageபாலத்தில் இருந்து ஆற்றில் குதித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

22J 9

குதித்த உடனேயே அவர் சிறிது நேரம் நீரின் மேற்பரப்பில் தோன்றியிருந்தாலும், பின்னர் திடீரென நீருக்குள் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இதையடுத்து, பெர்ன் மாகாண காவல்துறையினர் ஹெலிகாப்டர் உள்ளிட்ட அவசர மீட்புக் குழுக்களுடன் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

ஆனால் ஆரம்பகட்ட தேடுதல்கள் பலனளிக்காத நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கால்வாய் நடைபாதை அருகே அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தின் சரியான காரணம் குறித்து அரசு வழக்கறிஞர் அலுவலகமும் காவல்துறையும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன.

தற்போதைய தகவல்களின் அடிப்படையில், இது ஒரு நீச்சல் விபத்தாகவே கருதப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆறுகள் மற்றும் வேகமான நீரோட்டம் உள்ள பகுதிகளில் நீச்சல் அடிக்கும் போது பாதுகாப்பு விதிகளை கட்டாயம் பின்பற்றுமாறு அதிகாரிகள் மீண்டும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button