Swiss News In Tamil
சுவிஸ் ஜனாதிபதி கெரின் கெல்லர் சூட்டர் அஸ்திரியாவிற்கு விஜயம்
சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதி கெரின் கெல்லர் சூட்டர் அஸ்திரியாவிற்கு விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் முதல் வெளிநாட்டு விஜயமாக அஸ்திரிய விஜயம் அமைந்துள்ளது.
புதிய சுவிஸ் ஜனாதிபதி சூட்டர் அஸ்திரிய ஜனாதிபதி வென் டெர் பெலனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகள் குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சூட்டர் சுவிட்சர்லாந்தின் நிதி அமைச்சராகவும் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






