Swiss News In Tamil
Schaffhausen மாட்டுத்தொழுவத்தில் தீ : இரண்டு பசுக்கள் பலி
Schaffhausen மாட்டுத்தொழுவத்தில் தீ : இரண்டு பசுக்கள் பலி
தொழுவம் முற்றிலும் எரிந்து நாசமானது. தீயினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என Schaffhausen பொலிசார் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு 7:45 மணியளவில் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அவசரகால சேவைகள், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுடன் இணைந்து 49 பசுக்களையும் 72 கன்றுகளையும் காப்பாற்ற முடிந்தது. இரண்டு கறவை மாடுகள் தீயில் கருகி பலியாகியுள்ளன.
அவசர சேவைகள் வந்து பார்த்தபோது, தொழுவம் முழுமையாக எரிந்து கொண்டிருந்தது. தீயணைப்பு துறையினர் அதை அணைத்து, அருகில் இருந்த கட்டிடங்களை தீயில் இருந்து பாதுகாத்தனர். தீ விபத்திற்கான காரணம் மற்றும் சொத்து சேதத்தின் அளவு கண்டறியப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
(sda/joe)





