Swiss News In Tamil

சென்ட்காலன் கன்டோனில் உள்ள நெடுஞ்சாலையில் பற்றியெரிந்த கார்!!

சென்ட்காலன் கன்டோனில் உள்ள நெடுஞ்சாலையில் பற்றியெரிந்த கார்!! இன்று செவ்வாய்க்கிழமை காலை 7:20 க்குப் பிறகு, சர்கான்ஸ் திசையில் ஏ13 நெடுஞ்சாலையில் வாகனம் ஒன்று தீப்பிடித்தது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கன்டோனல் போலீசார் தெரிவிக்கின்றனர். சேதம் சுமார் 14,000 பிராங்குகளுக்கு மேல் என தெரிவிக்கப்படுகிறது.

39 வயதுடைய நபர் ஒருவர் சர்கன்ஸ் நோக்கி ஏ13 நெடுஞ்சாலையில் ஓட்டிச் சென்றார். அந்த நபர் காரில் சக்தி இழப்பையும், காரில் இருந்து புகை வருவதையும் கவனித்த பிறகுஇ அவர் தனது காரை நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிறுத்தியுள்ளார்.

wppi image polizei newsHaag high scaled 1
(c)St.gallen கன்டோனல் போலீஸ்

அவர் வெளியே வந்து காரை அவதானித்த பின்னர், நிறைய புகை மற்றும் தீப்பிழம்புகளைக் கவனித்துள்ளார். இச்சம்பவம் பற்றி தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஓட்டுநர் அவசர சேவை மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கார் மற்றும் சாலையோர உபகரணங்களுக்கு சேதம் சுமார் 14,000 பிராங்குகள் ஏற்பட்டுள்ளது. தீயணைக்கும் நடவடிக்கைகளால் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source:- KAPO St.gallen

Related Articles

Back to top button