“பேசல் நகரில் வரலாறு காணாத வெப்பம்! ஜூன் மாத வெப்ப சாதனை தகர்ந்தது!”
"பேசல் நகரில் வரலாறு காணாத வெப்பம்! ஜூன் மாத வெப்ப சாதனை தகர்ந்தது!"

“பேசல் நகரில் வரலாறு காணாத வெப்பம்! ஜூன் மாத வெப்ப சாதனை தகர்ந்தது!”
சுவிட்சர்லாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்ப அலை தாக்கம் அதிகரித்துள்ளது. பேசல் நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஜூன் மாத வெப்பநிலை சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
பேசல்-பின்னிங்கன் பகுதியில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகியுள்ளது. இது பல ஆண்டுகளாக இருந்த ஜூன் மாத வெப்ப சாதனையை முறியடித்துள்ளது.
வாலெய்ஸ் மாகாணத்தின் விஸ்ப் நகரிலும் 36.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி புதிய சாதனை உருவாகியுள்ளது. மேலும், பல வானிலை நிலையங்களில் 37 டிகிரி செல்சியஸை கடந்த வெப்பநிலைகள் பதிவாகியுள்ளன.
சுவிஸ் வானிலை ஆய்வு மையமான MeteoSwiss எச்சரிக்கையின்படி, ஆல்ப்ஸ் மலைத்தொடரின் வடக்கு பகுதிகளில் வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கடும் வெப்பம் காரணமாக சுவிட்சர்லாந்தின் பனிப்பாறைகள் வேகமாக பின்வாங்கி வருவதாகவும், இது காலநிலை மாற்றத்தின் தீவிர தாக்கத்தை காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அதிக வெப்பம் காரணமாக காட்டுத்தீ மற்றும் வறட்சி அபாயமும் அதிகரித்துள்ளது. சில மாகாணங்களில் நீர் பயன்பாட்டிற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வெயிலில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக ஜெனீவாவில் வெளிப்புற வேலைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதியம் நேரடி வெயிலில் வேலை செய்வதை தவிர்க்கவும், இடைவெளி மற்றும் ஓய்வு நேரங்களை கடைப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து தற்போது சந்தித்து வரும் இந்த வரலாறு காணாத வெப்ப அலை, காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து மீண்டும் ஒரு பெரிய எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.





