Local Swiss News

சிறையில் இருந்தும் இயக்கப்பட்ட ரகசிய நெட்வொர்க்! துருக்கிய ஆயுத கும்பலை சிக்க வைத்த போலீஸ்

சிறையில் இருந்தும் இயக்கப்பட்ட ரகசிய நெட்வொர்க்! துருக்கிய ஆயுத கும்பலை சிக்க வைத்த போலீஸ்

சிறையில் இருந்தும் ஐரோப்பா முழுவதும் செயல்பட்டு வந்ததாக கூறப்படும் மிகப்பெரிய ஆயுதக் கடத்தல் கும்பலை அதிகாரிகள் அதிரடியாக முறியடித்துள்ளனர்.

யூரோபோல் மற்றும் சுவிஸ் கூட்டாட்சி காவல் அமைப்பான ஃபெட்போல் உதவியுடன், பிரெஞ்சு அதிகாரிகள் தெற்கு பிரான்சில் நடத்திய சிறப்பு நடவடிக்கையில் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சோதனைகளில் 1.2 மில்லியன் யூரோவுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஃப்ரேஜஸ், கேன்ஸ், நைஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் போலி மற்றும் மாற்றியமைக்கப்பட்ட துப்பாக்கிகள், சொகுசு வாகனங்கள், நகைகள், கணினிகள் மற்றும் ஆயிரக்கணக்கான யூரோ பணம் கைப்பற்றப்பட்டது.

A17 1

இந்த விசாரணை கடந்த 2025ஆம் ஆண்டு தொடங்கியது. சுவிட்சர்லாந்திலிருந்து பிரான்ஸ் சென்ற ஒரு சொகுசு காரில் இரண்டு போலி கைத்துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதே இந்த பெரிய விசாரணைக்கு காரணமாக அமைந்தது.

இதன் மூலம் பெரும்பாலும் துருக்கிய பின்னணியை கொண்டதாக கூறப்படும் ஒரு சர்வதேச வலையமைப்பு வெளிச்சத்திற்கு வந்தது.

இந்தக் குழுவின் முக்கிய நபர் ஒருவர் ஸ்லோவாக்கியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் துருக்கிக்கு நாடு கடத்தப்பட்டதாகவும், சிறையில் இருந்தபோதும் தனது கூட்டாளிகள் மூலம் செயல்பாடுகளை தொடர்ந்ததாகவும் விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

துருக்கியிலிருந்து ஐரோப்பாவுக்கு தொழிற்சாலை தயாரிப்பைப் போல தோன்றும் போலி ஆயுதங்களை கடத்தி, பல நாடுகளில் உள்ள குற்றவாளிகளுக்கு விற்பனை செய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இந்தக் குழு, ஆடம்பர வீடுகள் மற்றும் உயர் ரக வாகனங்களை பயன்படுத்தி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பா முழுவதும் பரவியிருந்த இந்த ஆயுத வலையமைப்பை முறியடித்தது, சர்வதேச குற்றத்துக்கு எதிரான முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button