Swiss News In Tamil

சொலுத்தூர்னில் மோசடிக்காரர்களிடம் பணத்தை இழந்த பெண்

சொலுத்தூர்னில் மோசடிக்காரர்களிடம் பணத்தை இழந்த பெண் சமீபத்திய வாரங்களில், சொலுத்தூர்ன் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான மோசடி தொலைபேசி அழைப்புகள் பதிவாகியுள்ளன.

சொலுத்தூர்ன் க்ரென்சென் பகுதியில், ஒரு பெண் போலிபோலீஸ் அதிகாரி தன்னை அழைத்து வற்புறுத்தியதை அடுத்து, 10,000 பிராங்குகளை அவர்களிடம் ஒப்படைந்து ஏமாந்துள்ளார்.

அந்த பெண் தான் வசிக்கும் இடத்தில் வைத்து பணத்தை குற்றவாளிகளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதல், 200க்கும் மேற்பட்ட முறைகேடு தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக, கன்டோனல் போலீசார் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர்.

இன்னும் அதிக எண்ணிக்கையில் அறிவிக்கப்படாத அழைப்புகள் இருக்கும் என போலீசார் கருதுகின்றனர். அழைப்பாளர்களில் பலர் போலிஸ் அதிகாரிகளாக நடித்து, உரையாடலின் போது பொய்களைச் சொல்வார்கள்.

எடுத்துக்காட்டாக விபத்து, கொள்ளை அல்லது குற்றத்திற்குப் பிறகு கைது போன்ற விடயங்களை சொல்லி ஏமாற்றுகிறார்கள். இவ்வாறான தனிப்பட்ட அழைப்புகளுக்கு கூடுதலாக, ஆங்கில மொழி கணினி குரல்களுடன் அறிவிப்புகளும் உள்ளதாகவும் போலீசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

enkeltrick

பல்வேறு சாத்தியமான பொய்களால் அழுத்தம் கொடுக்கப்பட்டு இவ்வாறான ஏமாற்று வேலைகள் இடம்பெறுகிறது. கன்டோனல் போலீசார் பொதுவாக தெரியாத அழைப்பாளர்களை சந்தேகிக்க வேண்டும் என்றும் தெரியாத நபர்களிடம் பணம் அல்லது மதிப்புமிக்க பொருட்களை ஒருபோதும் ஒப்படைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

சந்தேகம் வரும் படியான தொலைபேசி அழைப்புகளை உடனடியாக துண்டிக்கும்படியும் மேலும் போலீசாரின் அவசரகால எண் 117 இல் முறைப்பாடு செய்யவேண்டும் எனவும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

Back to top button