Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் வேகமாக பரவும் “Nimbus” கொரோனா வகை வைரஸ்

சுவிட்சர்லாந்தில் வேகமாக பரவும் “Nimbus” கொரோனா வகை வைரஸ்

நிம்பஸ்’ (Nimbus) எனப்படும் புதிய கொரோனா வகை உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ள நிலையில், சுவிட்சர்லாந்திலும் அதன் தாக்கம் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சுவிட்சர்லாந்தில் கொரோனா பரிசோதனைகள் தற்போது முறையாக நடத்தப்படவில்லை என்றாலும், பொதுநலக்கழிவு நீர் மாதிரிகள் மூலம் வைரஸின் பரவலை நிபுணர்கள் கண்காணித்து வருகின்றனர்.

“நாம் மே மாத தொடக்கத்தில் இந்த வகையின் சுவடுகளை முதன்முதலில் கண்டோம். அதன் பின்னர், சுவிட்சர்லாந்தில் நாங்கள் கண்காணிக்கும் ஆறு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலும் இந்த வகை தொடர்ந்து தெரிய வந்தது என Basel (பாசல்) பல்கலைக்கழகத்தின் பையோஇன்ஃபர்மேடிக்ஸ் பேராசிரியர் நிகோ பீரன்விங்கெல் கூறியுள்ளார்.

Nimbus

அடுத்த ஒரு முதல் இரண்டு மாதங்களில் இது முக்கியமான வகையாக மாறும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என அவர் தெரிவித்துள்ளார். நிம்பஸ் வகை கடந்த கால வகைகளை விட அதிக ஆபத்தானதல்ல என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் கடந்த ஆறு மாதங்களில் மக்கள் பலர் வைரசால் பாதிக்கப்படாத நிலையில், சில வாரங்களில் புதிய கோடைக்கால பரவல் (summer wave) ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு (WHO) தற்போது ஆறு முக்கியமான கொரோனா வகைகளை கண்காணித்து வரும் நிலையில், அதில் ‘நிம்பஸ்’ முக்கியமாகப் பரவக்கூடிய வகையாக இருந்து வருவதால், இது சிறப்பாக கண்காணிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button