Swiss News In Tamil

பாசல் சிட்டியில் வெளிநாட்டவர்கள் இனி வாக்களிக்க முடியும்

பாசல் சிட்டியில் வெளிநாட்டவர்கள் இனி வாக்களிக்க முடியும்

பாசல் பாராளுமன்றம் வெளிநாட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை ஆதரித்துள்ளது.

குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் பாசல் சிட்டியில் வசிக்கும்இ குடியிருப்பு அனுமதி பெற்ற வெளிநாட்டினர், கன்டோனில் வாக்களிக்க முடியும் என்று பாராளுமன்றம் தீர்மானித்துள்ளது.

நேற்று வியாழன் அன்று 53 க்கு 41 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாசல்

இந்த நடவடிக்கைக்கான காரணம், வயது வந்த பாசல்சிட்டி மக்கள் தொகையில் 38 சதவீதம் பேர் வெளிநாட்டினர் ஆகும். உள்ளூர் அரசியல் விஷயங்களில் அவர்கள் பேச அனுமதிக்கப்படவில்லை.

ஏனைய மண்டலங்களில் இதேபோன்ற நகர்வுகள் இருந்தபோதிலும் விரைவில் ஜெனீவாவிலும் இந்த பிரச்சினை தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button