Swiss News In Tamil
Basel Reigoldswil நகரில் முழுவதுமாக பற்றிய எரிந்த கார்.!!
நேற்று காலை பாசல் நகரில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் முற்றாக சேதமடைந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பாசல் Reigoldswil லில் காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு கன்டோன் தீயணைப்புதுறை விரைந்தபோதும் கார் முழுவதுமாக தீயில் கருகி நாசமாகியிருந்ததாக குறிப்பிடப்படுகிறது. எனினும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

குறித்த தீ விபத்து காரின் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. இதனை தொடர்ந்து வீதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமையினால் பல மணி நேரம் சுத்தம் செய்யும் பணிகளுக்காக வீதி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Quelle: Polizei Basel-Landschaft
Bildquelle: Polizei Basel-Landschaft






