மாட்டிறைச்சிக்குப் பதிலாக சைவ உணவு கலந்திருக்க வாய்ப்பு! – ‘அன்னாஸ் பெஸ்ட் மோமோஸ் பீஃப்’ (Anna’s Best Momos Beef) தயாரிப்பைத் திரும்பப் பெறுகிறது ‘மைக்ரோஸ்’ (Migros).

சுவிட்சர்லாந்தின் முன்னணி பல்பொருள் அங்காடி நிறுவனமான மைக்ரோஸ் (Migros), தனது ‘அன்னாஸ் பெஸ்ட் மோமோஸ் பீஃப்’ (Anna’s Best Momos Beef – பொருள் எண்: 1305.328) என்ற தயாரிப்பை அவசரமாகத் திரும்பப் பெற்றுள்ளது.
குறித்த பொட்டலங்களில் மாட்டிறைச்சி மோமோக்களுக்குப் பதிலாக சைவ மோமோக்கள் கலந்திருக்க வாய்ப்புள்ளதே இதற்குக் காரணமாகும்.
இந்தச் சைவ மோமோக்களில் பால் மற்றும் எள் ஆகிய ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் (Allergens) அடங்கியுள்ள போதிலும், மாட்டிறைச்சி பொதியுறையில் அவை குறிப்பிடப்படவில்லை.
இதனால் பால், லாக்டோஸ் அல்லது எள் ஒவ்வாமை கொண்டவர்கள் இவற்றை உட்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது; மற்றவர்களுக்கு இதனால் எவ்விதப் பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 29, 2026 முதல் டிசம்பர் 8, 2026 வரையிலான காலாவதித் தேதிகளைக் கொண்ட இத்தயாரிப்பு விற்பனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே வாங்கிய வாடிக்கையாளர்கள் அதனைக் கடைகளில் ஒப்படைத்து முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம் என மைக்ரோஸ் அறிவித்துள்ளது.



