நாய் எனப் பதிவு செய்து சட்டவிரோதமாகச் சுவிட்சர்லாந்திற்குள் கொண்டுவரப்பட்ட ஓநாய் பறிமுதல்! – உரிமையாளர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு.

சுவிட்சர்லாந்தின் பெர்ன் (Bern) மாகாணத்தில் தனிநபர்கள் சிலர் ஓநாய் ஒன்றை நாய் எனப் பதிவு செய்து வளர்த்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டரை வயதுடைய அந்த விலங்கை மரபணுப் பரிசோதனை செய்ததில் அது ஓநாய் என்பது உறுதியானதைத் தொடர்ந்து, கால்நடை விவகார அலுவலகம் அதனைப் பறிமுதல் செய்துள்ளது.
ஐரோப்பிய செல்லப்பிராணி கடவுச்சீட்டைப் (European pet passport) பயன்படுத்தி இவ்வுயிரினம் எல்லை கடத்திக் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஃபெடரல் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அலுவலகம் (BAZG) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட ஓநாயை மீண்டும் காட்டில் விடுவிக்க வாய்ப்பில்லை என்பதால், அது சிறைப்பிடிக்கப்பட்ட சூழலில் பிற ஓநாய்களுடன் பராமரிக்கப்படவுள்ளது.
பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் சர்வதேச வர்த்தக உடன்படிக்கையின் (CITES) கீழ் வரும் ஓநாயை உரிய அனுமதியின்றி இறக்குமதி செய்த குற்றத்திற்காக, சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



