Swiss News In Tamil

பெரிய நிறுவனங்கள் மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழலை மதிப்பதை உறுதிசெய்யும் புதிய மாற்றுச் சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது சுவிஸ் அரசு!

பெரிய நிறுவனங்கள் மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழலை மதிப்பதை உறுதிசெய்யும் புதிய மாற்றுச் சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது சுவிஸ் அரசு!

2 8

சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நிறுவனங்கள் மனித உரிமைகளையும் சுற்றுச்சூழலையும் மதிப்பதை உறுதிசெய்யும் புதிய சட்ட வரைவைச் சுவிஸ் அரசு நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளதாக நீதி அமைச்சர் பேட் யான்ஸ் (Beat Jans) பேர்ன் (Bern) நகரில் அறிவித்தார்.

‘நிறுவனங்களின் பொறுப்பு’ மக்கள் முயற்சிக்கு (Konzernverantwortungsinitiative) மாற்றுத் திட்டமாகக் கொண்டுவரப்பட்டுள்ள இச்சட்டம், 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட 30 முதல் 60 பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

கிளை நிறுவனங்களின் தவறுகளுக்குத் தாய் நிறுவனம் பொறுப்பேற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களே நிறுவனத்தின் தவறை நீதிமன்றத்தில் நிரூபித்து இழப்பீடு பெற வேண்டும்.

புதிய அலுவலகம் உருவாக்கப்படாமல் கணக்குத் தணிக்கை கண்காணிப்பு அலுவலகமே இதனைக் கண்காணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.