Swiss News In Tamil

சுவிட்சர்லாந்துடனான புதிய இருதரப்பு ஒப்பந்தத் தொகுப்புக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல்!

சுவிட்சர்லாந்துடனான புதிய இருதரப்பு ஒப்பந்தத் தொகுப்புக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல்!

1 8

சுவிட்சர்லாந்துடன் செய்துகொள்ளப்பட்ட புதிய இருதரப்பு ஒப்பந்தத் தொகுப்புக்கு (Bilaterals III) ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் புதன்கிழமை ஸ்ட்ராஸ்பூர்க்கில் (Strasbourg) ஒப்புதல் அளித்துள்ளது. நடைபெற்ற வாக்கெடுப்பில் 584 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 13 பேர் எதிராகவும் வாக்களித்தனர்; 60 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

கடந்த மார்ச் மாதம் சுவிஸ் ஜனாதிபதி கை பார்மலன் (Guy Parmelin) மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வோன் டேர் லையன் (Ursula von der Leyen) ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட இவ்வொப்பந்தங்கள், மக்கள் நடமாட்டம், வேலைவாய்ப்பு, வர்த்தகம், போக்குவரத்து, விவசாயம், மின்சாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை எளிதாக்கும்.

இனி அடுத்தகட்ட முடிவு சுவிட்சர்லாந்தின் கையில் உள்ளதாக ஐரோப்பிய நாடாளுமன்ற அறிக்கையாளர் கிறிஸ்டோஃப் க்ரூட்லர் (Christophe Grudler) தெரிவித்துள்ளார். சுவிஸ் நாடாளுமன்ற ஒப்புதலுக்குப் பின்னர், 2028-ஆம் ஆண்டில் இது தொடர்பான பொது வாக்கெடுப்பு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.