சுவிட்சர்லாந்தில் குடியேறும் வெளிநாட்டவர்கள் இனி அசல் அடையாள ஆவணங்களைக் காட்டுவது கட்டாயம்! – மோசடிகளைத் தடுக்க கூட்டாட்சி மன்றம் புதிய அதிரடி விதி.

சுவிட்சர்லாந்தில் புதிதாகக் குடியேறும் வெளிநாட்டுப் பிரஜைகள், நகராட்சி அல்லது மாகாண அலுவலகங்களில் முதன்முறையாகப் பதிவு செய்யும்போது இனி அசல் அடையாள ஆவணங்களை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என சுவிஸ் கூட்டாட்சி மன்றம் (Federal Council) அறிவித்துள்ளது.
ஆவணங்களின் நகல்கள் அல்லது ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளை மட்டும் சமர்ப்பிப்பதால் அடையாளத் திருட்டு மற்றும் மோசடிகள் அதிகரிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
இதனைத் தடுக்கும் வகையில், முதல் பதிவின் போதே அதிகாரிகள் அசல் கடவுச்சீட்டு அல்லது அடையாள அட்டையை நேரடியாகச் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதிமுறை சுவிட்சர்லாந்தில் யார் வசிக்கலாம் என்ற தகுதியை மாற்றவில்லை என்றாலும், முதல் சந்திப்பின் போதே அசல் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்குகிறது.
இதற்கான சட்டத் திருத்த ஆலோசனை நடைமுறைகள் 2027 மார்ச் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



