சுவிஸில் காட்டுக்குள் ஒளிந்திருக்கும் யானை பற்றி யாருக்கு தெரியும்.? சூரிச்சில் ஒரு அழகான இயற்கைப் பயணம் – Elefantenbach முதல் Werenbachtobel வரை!
வணக்கம் மக்களே!
சூரிச் என்றாலே நம்முடைய நினைவுக்கு வருவது என்ன?
பெரிய பெரிய கட்டிடங்கள்… பரபரப்பான வீதிகள்… ட்ராம் வண்டிகள்… ரயில் நிலையங்கள்… வங்கிகள்… Shopping என்று சொல்லிக்கொண்டே போகலாம்!
ஆனால், இதே சூரிச்சில் நகரத்தின் சத்தமே கேட்காத அளவுக்கு, மரங்கள் சூழ்ந்து, அழகான சிற்றாறுகள் ஓடி, பறவைகளின் சத்தம் மட்டுமே காதில் விழுகின்ற ஒரு அற்புதமான இயற்கை உலகம் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?
அதுவும் ஒரு கல்லால் செய்யப்பட்ட யானை, காட்டுக்குள் ஓடுகின்ற ஆற்றின் நடுவில் நின்றுகொண்டிருந்தால் எப்படி இருக்கும்?
ஆம்! நாங்கள் இன்று செல்லப்போவது அப்படியொரு வித்தியாசமான இடத்திற்குத்தான்.
Elefantenbach!
அதுமட்டுமல்ல… Stöckentobel, Witikon, Trichtenhausen, Werenbachtobel என்று பல அழகான இடங்களைக் கடந்து செல்லப்போகிறோம்.
சுமார் இரண்டு மணி நேரம் இயற்கையோடு பயணம் செய்யத் தயாரா?
அப்படியானால் வாங்க மக்களே… இன்றைய நம்முடைய பயணத்தை ஆரம்பிப்போம்!
போவோமா ஊர்கோலம்!
Zürich Burgwies: பயணத்தின் ஆரம்பம்
நண்பர்களே, நம்முடைய பயணம் ஆரம்பமாகிறது Zürich Burgwies என்ற இடத்திலிருந்து. இந்த இடத்திற்கு Tram மூலமாகவே இலகுவாக வந்து சேரலாம். இங்கிருந்து Elefantenbachweg என்ற Hiking பாதையைப் பின்பற்றி நாம் செல்ல வேண்டும்.
ஆரம்பத்தில் ஒரு சாதாரண வீதியில் நடப்பது போலத்தான் இருக்கும். ஆனால் கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது.
நகரத்தின் வீதிகளை விட்டுவிட்டு, நாம் மெதுவாக ஒரு அழகான காட்டுக்குள் நுழைந்துவிடுவோம். ஒரு பக்கம் உயரமான மரங்கள்… இன்னொரு பக்கம் சலசலவென ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீர்…
நகரத்தின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போகும். உண்மையைச் சொல்லப்போனால், சூரிச்சில் இப்படி ஒரு இடம் இருக்கிறதா என்று நம்மையே ஆச்சரியப்பட வைக்கும்!
இங்குதான் நம்முடைய முதல் முக்கியமான இடமான Stöckentobel அமைந்திருக்கிறது.
Stöckentobel: இயற்கையின் அழகான உலகம்
இந்த Stöckentobel பகுதி உண்மையிலேயே பார்க்க வேண்டிய ஒரு அழகான இயற்கைச் சூழல். இங்கு ஒரு சிறிய ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது.
அந்த ஆற்றின் ஓரமாகவே நடைபாதை அமைக்கப்பட்டிருக்கிறது. இடையிடையே மரப்பாலங்கள், படிக்கட்டுகள், சிறிய பாதைகள் என்று இயற்கையோடு இணைந்த ஒரு அழகான பயணமாக இது அமைகிறது.
நாம் நடந்து செல்லும்போது தண்ணீர் ஓடும் சத்தம் மட்டுமே கேட்கும். அதுவும் சில இடங்களில் தண்ணீர் கற்களுக்கு மேலே விழுந்து ஓடும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
இங்கு நிறைய இடங்களில் அமர்ந்து ஓய்வெடுப்பதற்காக Bench-களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அவசர அவசரமாக நடக்க வேண்டிய அவசியமில்லை.
நிதானமாக நடந்து, இயற்கையை ரசித்து, அழகான புகைப்படங்களையும் எடுத்துக்கொள்ளலாம். ஒரு முக்கியமான விஷயம்!
இந்தப் பாதை சில இடங்களில் ஈரமாகவும் வழுக்கக்கூடியதாகவும் இருக்கலாம். அதனால் நல்ல Hiking Shoes அணிந்து செல்வது நல்லது.
Elefantenbach: காட்டுக்குள் இருக்கும் கல் யானை!
சரி மக்களே… இப்போது நாம் வந்திருப்பது இந்தப் பயணத்தின் மிக முக்கியமான Highlight!
அதுதான் Elefantenbach!
இங்கே ஒரு கல்லால் செய்யப்பட்ட யானை, ஆற்றின் நடுவில் நின்றுகொண்டிருக்கிறது. முதன்முதலாக இதைப் பார்க்கும்போது நமக்கே ஒரு சின்ன ஆச்சரியம் வரும்.
அடடா! காட்டுக்குள் யானையா?
ஆனால் இது உண்மையான யானை கிடையாது. கல்லால் உருவாக்கப்பட்ட ஒரு அழகான சிற்பம். இந்த யானை 1898ஆம் ஆண்டு Zürich நகரின் அழகைப் பேணுவதற்காகச் செயல்பட்ட Verschönerungsverein Zürich என்ற அமைப்பினால் உருவாக்கப்பட்டது.
அதாவது நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஒரு சிற்பம் இது! இன்றைக்கும் இங்கு வருபவர்களின் முக்கியமான புகைப்பட இடமாக இந்த யானை இருக்கிறது.
குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த இடம் மிகவும் பிடிக்கும். யானைக்கு அருகில் நின்று Photo எடுக்கலாம்… குடும்பமாக வந்தால் அழகான நினைவுகளை உருவாக்கலாம். இங்கே இன்னொரு சிறப்பும் இருக்கிறது.
யானைக்கு மேல்புறமாக ஒரு அழகான Fire Place அமைக்கப்பட்டிருக்கிறது. அதனுடன் ஒரு சிறிய Shelter-உம் இருக்கிறது. அதாவது சுவிட்சர்லாந்தின் இயற்கையை ரசித்துக்கொண்டே குடும்பத்தினருடன் சிறிய Barbecue அல்லது ஓய்வு நேரத்தைச் செலவிடலாம்.
ஆனால் Fire Place பயன்படுத்தும்போது அங்குள்ள விதிமுறைகளையும் தீ பாதுகாப்பையும் கவனிக்க வேண்டும். ஒரு சின்ன கேள்வி மக்களே!
நம்முடைய ஊரில் யானையைப் பார்க்க வேண்டுமென்றால் Zoo-வுக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால் சூரிச்சில் ஒரு காட்டுக்குள் யானையைப் பார்க்கலாம்!
அதுவும் 1898ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட யானை!
எப்படி இருக்கிறது இந்த இடம்?
10,000 முதல் 15,000 ஆண்டுகள் பழமையான இயற்கை வரலாறு!
இப்போது ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைப் பற்றிப் பேசலாம். நண்பர்களே, நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் இந்த அழகான பள்ளத்தாக்குகள், சிற்றாறுகள், ஆழமான காட்டு வழிகள் எல்லாம் எப்படி உருவாகின தெரியுமா?
இதற்குப் பின்னால் இருக்கிறது பனிக்காலத்தின் வரலாறு! சுமார் 10,000 முதல் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த Zürich பகுதி மிகப்பெரிய பனிப்பாறைகளால் பாதிக்கப்பட்டிருந்தது.
Linthgletscher என்று அழைக்கப்படும் அந்தப் பனிப்பாறை, கடைசி பனிக்காலத்தின் முடிவில் மெதுவாகப் பின்வாங்கியது.
அந்தப் பனிப்பாறைகள் நகர்ந்தபோதும், உருகிய தண்ணீர் ஓடியபோதும், நிலப்பரப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அதன் விளைவாகத்தான் இன்றைக்கு நாம் பார்க்கும் இந்த அழகான Tobel எனப்படும் பள்ளத்தாக்குகள் உருவாகின.
அதாவது, நாம் இப்போது ரசித்துக்கொண்டிருக்கும் இந்த இயற்கைக் காட்சிகள் ஒரே நாளில் உருவானவை கிடையாது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் இயற்கை மாற்றங்களின் விளைவுதான்! சிந்தித்துப் பாருங்கள்…
நாம் இப்போது ஒரு சிறிய Hiking பயணம் செய்கிறோம். ஆனால் நம்முடைய காலடியில் இருக்கும் நிலம் எத்தனை ஆயிரம் ஆண்டுகளின் வரலாற்றைச் சுமந்துகொண்டிருக்கிறது!
இதுதான் சுவிட்சர்லாந்தின் இயற்கையின் மிகப்பெரிய அழகு.
Witikon: பழமையும் புதுமையும் சந்திக்கும் இடம்
சரி மக்களே… இப்போது காட்டுப்பாதையை விட்டு வெளியே வந்து Witikon என்ற அழகான பகுதிக்குள் நுழைகிறோம். Elefantenbach பகுதியில் இருந்து தொடர்ந்து நடந்து வந்தால் சுமார் 50 நிமிடங்களில் Witikon வந்துவிடலாம்.
இங்கே வந்ததும் இயற்கையின் இன்னொரு அழகான முகத்தைப் பார்க்க முடியும். அழகான வீடுகள்… அமைதியான வீதிகள்… பழமையான கட்டிடங்கள்…
குறிப்பாக இங்குள்ள பழைய Swiss பாரம்பரிய வீடுகள் மிகவும் அழகாக இருக்கின்றன. சில வீடுகளில் மர வேலைப்பாடுகளுடன் கூடிய பழமையான கட்டிட அமைப்புகளையும் பார்க்கலாம்.
நகரத்தின் நவீன வாழ்க்கைக்கும் பழைய Swiss கிராமிய வாழ்க்கைக்கும் இடையிலான வித்தியாசத்தை இங்கே நன்றாக உணர முடியும். இங்கே ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.
சுவிட்சர்லாந்தில் பல இடங்களில் நாம் கவனித்திருக்கலாம். பெரிய நகரங்களுக்குள்ளேயே சிறிய கிராமங்களைப் போன்ற அமைதியான பகுதிகள் இருக்கும்.
Witikon அதற்கு ஒரு நல்ல உதாரணம். இங்கே சிறிது நேரம் நடந்து, அந்த அழகான வீடுகளை ரசித்துவிட்டு, நம்முடைய அடுத்த இடமான Trichtenhausen நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்.
Trichtenhausen Mühle: வரலாற்றின் தடங்கள்
நண்பர்களே, இப்போது நாம் வந்திருப்பது Trichtenhausen Mühle என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு. இந்தப் பகுதியில் முன்பு Trichtenhausermühle என்ற பழமையான உணவகம் இருந்தது.
இந்த இடம் 946ஆம் ஆண்டிலிருந்தே வரலாற்றுடன் தொடர்புடையதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஒரு முக்கியமான தகவல் என்னவென்றால், இந்த உணவகம் 2022ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ளது.
இருந்தாலும், இங்கு இருக்கும் பழைய கட்டிடங்களும் வரலாற்றுச் சின்னங்களும் பார்ப்பதற்கு சுவாரஸ்யமானவை. குறிப்பாக பழைய Mill என்று சொல்லப்படும் நீரால் இயங்கும் ஆலை இங்கு பார்க்கக்கூடிய ஒரு சிறப்பான அம்சம்.
முன்பெல்லாம் தண்ணீரின் சக்தியைப் பயன்படுத்தி தானியங்களை அரைப்பது போன்ற வேலைகள் செய்யப்பட்டன.
இன்றைக்கு நமக்கு மின்சாரம், நவீன இயந்திரங்கள் என்று எல்லாமே இருக்கிறது. ஆனால் அந்தக் காலத்தில் தண்ணீர்தான் பல தொழில்களுக்கான முக்கியமான சக்தியாக இருந்திருக்கிறது.
இயற்கை எப்படி மனித வாழ்க்கைக்கு உதவியாக இருந்திருக்கிறது என்பதற்கு இந்த இடம் ஒரு நல்ல உதாரணம். சரி… இப்போது நம்முடைய பயணத்தின் அடுத்த முக்கியமான பகுதியை நோக்கிச் செல்வோம்.
Werenbachtobel: தண்ணீரின் வரலாறும் அழகான இயற்கையும்
மக்களே… இப்போது நம்முடைய பயணத்தின் இன்னொரு அழகான பகுதிக்குள் நுழைகிறோம். அதுதான் Werenbachtobel! இங்கே மீண்டும் ஒரு அழகான காட்டுப்பாதை நமக்காகக் காத்திருக்கிறது.
ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கும் Wehrenbach ஆறு… இன்னொரு பக்கம் பசுமையான மரங்கள்… இடையிடையே அழகான புல்வெளிகள், சிறிய நீரூற்றுகள், ஓய்வெடுக்கக்கூடிய இடங்கள் என்று இந்தப் பகுதி மிகவும் ரம்மியமாக இருக்கிறது.
இங்கு பல இடங்களில் Fire Place-களும் இருக்கின்றன. குடும்பமாகவோ நண்பர்களுடனோ Hiking வருபவர்களுக்கு இது மிகவும் பிடித்தமான இடமாக இருக்கும். ஆனால் இந்த Werenbachtobel-க்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறும் இருக்கிறது.
முன்பு இந்த Wehrenbach ஆறு வெறும் இயற்கை நீரோடையாக மட்டும் இருக்கவில்லை. அந்தக் காலத்தில் இந்தத் தண்ணீரின் சக்தியைப் பயன்படுத்துவதற்காக ஆற்றில் பல இடங்களில் Wehren எனப்படும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
அதாவது தண்ணீரின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி, அதன் சக்தியைப் பயன்படுத்தினார்கள். ஒரு காலத்தில் இந்த Wehrenbach, Zürich நகரின் முக்கியமான நீர்சக்தி ஆதாரங்களில் ஒன்றாக இருந்தது.
Limmat ஆற்றுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெற்றிருந்தது. இப்போது நமக்குத் தண்ணீர் என்றால் வீட்டில் குழாயைத் திறந்தால் கிடைத்துவிடுகிறது. ஆனால் பழைய காலத்தில் Zürich மக்களுக்கு குடிநீர் எப்படிக் கிடைத்தது தெரியுமா? அதுவும் ஒரு சுவாரஸ்யமான கதைதான்!

Zürich நகரின் பழைய குடிநீர் வரலாறு!
முன்பு Zürich நகர மக்கள் குடிநீருக்காக Limmat ஆற்றையும் இயற்கையான நீரூற்றுகளையும் நம்பியிருந்தார்கள். பின்னர் நகரத்தைச் சுற்றியுள்ள மலைச்சரிவுகளில் இருந்து கிடைக்கும் ஊற்று நீரைச் சேகரிக்கத் தொடங்கினார்கள்.
அந்தத் தண்ணீரை வீடுகளுக்குக் கொண்டு செல்வதற்காக Teuchel என்று அழைக்கப்படும் மரத்தால் செய்யப்பட்ட குழாய்கள் பயன்படுத்தப்பட்டன.
அதாவது மரத்தினாலேயே தண்ணீர் செல்லும் குழாய்களை உருவாக்கி, அதன் மூலம் தண்ணீரை பொது நீரூற்றுகளுக்குக் கொண்டு வந்தார்கள்.
அங்கிருந்து மக்கள் தங்களுடைய வீடுகளுக்குத் தண்ணீரை எடுத்துச் சென்றார்கள். இப்போது நம்முடைய வீட்டில் Kitchen Tap-ஐத் திறந்தால் தண்ணீர் வருகிறது.
ஆனால் அந்தக் காலத்தில் ஒரு குடம் தண்ணீர் எடுப்பதற்குக்கூட மக்கள் எவ்வளவு முயற்சி செய்திருக்க வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள்!
பின்னர் 1871ஆம் ஆண்டு, நகரப் பொறியாளர் Arnold Bürkli அவர்களின் திட்டங்களின் அடிப்படையில், Zürich நகரில் சுத்திகரிக்கப்பட்ட ஏரி நீரை அடிப்படையாகக் கொண்ட தனிப்பட்ட நீர் விநியோக முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்றைக்கும் Zürich நகரில் சுமார் 100 அவசரகால நீரூற்றுகள் ஊற்று நீரைப் பயன்படுத்தும் வகையில் செயல்பாட்டில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
பாருங்கள் மக்களே…
நாம் இன்று கடந்து வந்த இந்த அழகான ஆற்றுப்பாதை வெறும் Hiking இடம் மட்டுமல்ல.
Zürich நகரின் வரலாற்றோடும், மக்களின் வாழ்க்கையோடும் தொடர்புடைய ஒரு முக்கியமான இயற்கைப் பகுதியாகவும் இருக்கிறது.
மீண்டும் Zürich Burgwies: பயணத்தின் நிறைவு
சரி நண்பர்களே… இப்போது நாம் Werenbachtobel வழியாக மீண்டும் Zürich Burgwies நோக்கிப் பயணத்தைத் தொடர்கிறோம். வழியெங்கும் ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீர்… பசுமையான மரங்கள்… அழகான Fire Place-கள்… இயற்கையோடு இணைந்த நடைபாதைகள்…
இவற்றையெல்லாம் ரசித்துக்கொண்டே மீண்டும் நம்முடைய ஆரம்ப இடத்திற்கே வந்து சேரலாம். இந்த முழுப் பயணமும் சுமார் 1 மணி 50 நிமிடங்களில் நிறைவடைகிறது.
ஆனால் உண்மையைச் சொல்லப்போனால், இடையிடையே நின்று புகைப்படங்கள் எடுத்து, இயற்கையை ரசித்து, ஓய்வெடுத்தால் இன்னும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளலாம்.
அதுதான் இந்தப் பயணத்தின் அழகும் கூட!
அன்பான நேயர்களே…
இன்றைய நம்முடைய பயணம் எப்படி இருந்தது? சூரிச்சின் மையப்பகுதிக்கு அருகிலேயே இவ்வளவு அழகான இயற்கை உலகம் இருக்கிறது என்பதைப் பார்த்தோம்.
1898ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கல் யானை… ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உருவான பனிக்காலப் பள்ளத்தாக்குகள்…
அழகான Witikon கிராமம்…
946ஆம் ஆண்டுடன் தொடர்புடைய Trichtenhausen வரலாறு…
மற்றும் Zürich நகரின் பழைய குடிநீர் வரலாறு…
ஒரே ஒரு Hiking பயணத்தில் எத்தனை விஷயங்களைத் தெரிந்துகொண்டோம்!
நண்பர்களே, வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் கொஞ்சம் மெதுவாக நடக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
எப்போதும் வேலை… பணம்… பொறுப்புகள்… என்று ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
ஆனால் இயற்கையோடு கொஞ்ச நேரம் செலவிடும்போது மனதுக்கு ஒரு தனியான அமைதி கிடைக்கிறது.
அதனால் இந்த வார இறுதியில் உங்களுடைய குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு ஒரு சிறிய பயணத்தைத் திட்டமிடுங்கள்.
இயற்கையை ரசிப்போம்… வரலாற்றைத் தெரிந்துகொள்வோம்… நம்மைச் சுற்றியிருக்கும் அழகான இடங்களை அனுபவிப்போம்.
இப்படியான இன்னும் பல அழகான இடங்களையும் சுவாரஸ்யமான பயணங்களையும் உங்களுக்காகத் தேடிக்கொண்டு மீண்டும் சந்திக்கிறோம்.
இது உங்கள் Swiss Tamil TV!
உங்களுடன் பயணித்தது…
போவோமா ஊர்கோலம்!
நன்றி! வணக்கம்!



