இறுதிச் சடங்கின் நடுவே இடிந்த தேவாலய கோபுரம்… நொடியில் பதற்றம்!
இறுதிச் சடங்கின் நடுவே இடிந்த தேவாலய கோபுரம்... நொடியில் பதற்றம்!

இறுதிச் சடங்கின் நடுவே இடிந்த தேவாலய கோபுரம்… நொடியில் பதற்றம்!
சுவிட்சர்லாந்தின் வாலே மாகாணத்தில் உள்ள வெர்னாயாஸ் தேவாலயத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், தேவாலயக் கோபுரத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. பலத்த சத்தம் கேட்டதை சிலர் இடியுடன் ஒப்பிட்ட நிலையில், மற்றவர்கள் தேவாலயமே அதிர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் போது மேயர் ஸ்டெஃபானி ரெவாஸ் மார்டிக்னோனியும் அங்கு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஆரம்ப விசாரணைகளின்படி, பலத்த காற்றின் தாக்கத்தால் தேவாலயக் கோபுரத்தின் உச்சிப் பகுதி பெயர்ந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கூரை ஓடுகள் சேதமடைந்ததுடன், கூரையிலும் பெரிய துளை ஏற்பட்டுள்ளது.
தற்போது சேதமடைந்த பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், நிபுணர்கள் விரிவான ஆய்வு நடத்தவுள்ளனர். அதன் பின்னர் தேவையான பழுதுபார்ப்பு பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





