Local Swiss News

சாகசப் பயணம் விபரீதம்… கிளாரோவில் நடந்த கோர விபத்தில் 52 வயது பெண் பலி!

சாகசப் பயணம் விபரீதம்... கிளாரோவில் நடந்த கோர விபத்தில் 52 வயது பெண் பலி!

சாகசப் பயணம் விபரீதம்… கிளாரோவில் நடந்த கோர விபத்தில் 52 வயது பெண் பலி!

சுவிட்சர்லாந்தின் கிளாரோ மாகாணத்தில் சாகச மலைப்பயணத்தின் போது நிகழ்ந்த விபத்தில், 52 வயதுடைய பெல்ஜியப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மண்டல காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, இன்று மாலை சுமார் 4.30 மணியளவில், ரியாலே சென்சோ பகுதியில் குழுவினருடன் மலைப்பாதையில் சாகசப் பயணத்தில் ஈடுபட்டிருந்த அந்தப் பெண், திடீரென சுமார் 10 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.

விபத்து நடந்த உடனேயே அவருடன் இருந்த குழுவினர் அபாய ஒலி எழுப்பி, முதலுதவி சிகிச்சையைத் தொடங்கினர்.

31j 2222

இதையடுத்து மாகாண காவல்துறை, சுவிஸ் ஆல்பைன் மீட்புக் குழு (SAS) மற்றும் ரெகா ஹெலிகாப்டர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பெண்ணை ஹெலிகாப்டர் மூலம் பள்ளத்தாக்கிற்கு கொண்டு சென்று உயிரைக் காப்பாற்ற தீவிரமாக போராடினர்.

ஆனால், அவர் அடைந்திருந்த கடுமையான காயங்களால், மருத்துவர்களின் அனைத்து முயற்சிகளும் பலனளிக்காமல், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்துக்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த குழு உறுப்பினர்களுக்கு உளவியல் ஆலோசனை மற்றும் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button