Local Swiss News

வாகன நிறுத்துமிட மீட்டர்களில் போலி QR Code… சுவிட்சர்லாந்தில் புதிய மோசடி!

வாகன நிறுத்துமிட மீட்டர்களில் போலி QR Code... சுவிட்சர்லாந்தில் புதிய மோசடி!

வாகன நிறுத்துமிட மீட்டர்களில் போலி QR Code… சுவிட்சர்லாந்தில் புதிய மோசடி!

சுவிட்சர்லாந்தின் ஜுக் நகரில், வாகன நிறுத்துமிடக் கட்டண மீட்டர்களில் போலி QR குறியீடுகள் ஒட்டப்பட்ட சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை, ஆல்மென்ட்ஸ்ட்ராஸ் பகுதியில் உள்ள ஒரு பார்க்கிங் மீட்டரில் சந்தேகத்திற்கிடமான QR குறியீடு இருப்பதாக ஜுக் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக ரோந்து மேற்கொண்ட அதிகாரிகள், நகரின் பல்வேறு பகுதிகளிலும் இதேபோன்ற போலி QR ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருப்பதை கண்டறிந்து அனைத்தையும் அகற்றினர்.

20j 3

காவல்துறையின் தகவலின்படி, இந்த QR குறியீடுகளை ஸ்கேன் செய்யும் நபர்கள், உண்மையான கட்டணத் தளம் போல தோற்றமளிக்கும் மோசடி இணையதளங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு வங்கி அட்டை அல்லது பணம் செலுத்தும் தகவல்களை பதிவு செய்தால், அவை குற்றவாளிகளால் மோசடிப் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது.

எனவே, வாகன ஓட்டிகள் பார்க்கிங் மீட்டர்களில் ஒட்டப்பட்டுள்ள QR குறியீடுகளை நம்பி ஸ்கேன் செய்ய வேண்டாம் என்றும், முடிந்தவரை அதிகாரப்பூர்வ பார்க்கிங் செயலியைப் பயன்படுத்தவோ அல்லது மீட்டரிலேயே நேரடியாக பணம் செலுத்தவோ ஜுக் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

சந்தேகத்திற்கிடமான QR குறியீடுகள் தென்பட்டால், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button