Swiss News In Tamil

இணையக் காதல் மோசடியில் சிக்கிய 91 வயது முதியவர்

இணையக் காதல் மோசடியில் சிக்கிய 91 வயது முதியவர்

இணையத்தில் அறிமுகமான பெண்ணை காதலித்த 91 வயது சுவிஸ் முதியவர், மோசடிக்காரர்களிடம் சுமார் 20,000 சுவிஸ் பிராங்குகளை இழந்துள்ளார்.

அந்த பெண் பிரான்சில் சிறையில் இருப்பதாக கூறி 9,500 யூரோக்கள் கேட்டதுடன், மற்றொரு பெண் சொத்து வாரிசு கதையை கூறி மேலும் பணம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாதாரண பணப்பரிமாற்றங்களை கவனித்த வங்கி,குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் பாதுகாப்பு ஆணையம் (KESB)”  அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியது.

N9 1

மருத்துவ பரிசோதனையில் முதியவரின் அறிவாற்றல் வயது காரணமாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவரது நிதி நிர்வாகம் குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் பாதுகாப்பு ஆணைய  கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டது.

இந்த மோசடி வலையமைப்பு ஐவரி கோஸ்டிலிருந்து செயல்பட்டது பின்னர் விசாரணையில் தெரியவந்தது.

இந்த பாதுகாப்பு நடவடிக்கையை எதிர்த்து முதியவர் வழக்கு தொடர்ந்தாலும், Bundesgericht அவரது மனுவை நிராகரித்தது.