“Blackout Challenge” குறித்து பேர்ண் காவல்துறை அவசர எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஆபத்தான “Blackout Challenge” அல்லது “Pilot Test” எனப்படும் சவால்கள் குறித்து Bern கன்டோனல் காவல் துறை பெற்றோர்களுக்கும் இளைஞர்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆபத்தான சவாலுடன் தொடர்புடைய இரண்டு சம்பவங்கள் சமீபத்தில் Bern கன்டோனில் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் ஒரு இளைஞர் கடுமையாக காயமடைந்ததுடன், மற்றொருவர் லேசான காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளார்.
“Blackout Challenge” என்பது மூச்சை தடுக்குதல் அல்லது கழுத்தை நெரித்தல் போன்ற ஆபத்தான செயல்களை உள்ளடக்கியதாகும். சிலர் இதை சமூக வலைத்தளங்களில் “விளையாட்டு” அல்லது “வைரல் challenge” என முயற்சிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது உணர்விழப்பு, மூளை சேதம் மற்றும் உயிரிழப்பு போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இணையத்தில் பார்க்கும் ஆபத்தான உள்ளடக்கங்கள் குறித்து பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகைய சவால்கள் சில நேரங்களில் உயிரிழப்பிற்கும் காரணமாக முடிவடையக்கூடும் என்பதால், குடும்பங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என Bern கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
© Kapo BE