Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் வேலையின்மை விகிதம் குறைவடைந்துள்ளது

சுவிட்சர்லாந்தில் வேலையின்மை விகிதம் முன்பைவிட குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே சுவிசில் ஐரோப்பாவில் மற்ற இடங்களை விட வேலையின்மை விகிதம் குறைவாகவே காணப்படுகிறது.

தற்போது சுவிட்சர்லாந்தின் வேலையின்மை விகிதம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரியில் சிறிதளவு குறைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

வேலையின்மை

2.5 லிருந்து 2.4 சதவீதமாக குறைந்துள்ளது என்று பொருளாதார விவகாரங்களுக்கான மாநில செயலகம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பிராந்திய வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தில் 1.1 சதவீதம் குறைந்துள்ளதோடு, மேலும் 15 முதல் 24 வயது வரையிலான வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 2.1 சதவீதம் குறைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button