சூரிக் A1 நெடுஞ்சாலையில் 37 வாகனங்கள் மோதி விபத்து; 10 பேர் காயம்!

சூரிக் (Zürich) மாகாணத்தில் எஃப்ரெட்டிகான் (Effretikon) மற்றும் வின்டர்தூர் (Winterthur) இடையேயான A1 நெடுஞ்சாலையில் (செயின்ட் காலன் நோக்கிய வழி) இன்று அதிகாலை 37 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர்.
குளிர்காலச் சாலை நிலைமையால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் இவ்விபத்தால் அப்பகுதியில் நெடுஞ்சாலை மாலை வரை முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன், மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.



