மழலையர் பள்ளி குழந்தைகளுக்கான ‘லுமி’ (Lumi) பாதுகாப்பு அங்கியில் சர்ச்சை! – பெற்றோர், ஆசிரியர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து மறுவடிவமைப்பு செய்ய TCS முடிவு.
சுவிட்சர்லாந்தில் மழலையர் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் சாலைப் பாதுகாப்பிற்காக, சுமார் 50 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த பாரம்பரிய ‘சிண்ட்ஸ்கிபெண்டல்’ (Chindsgibändel) பிரதிபலிக்கும் ரிப்பனுக்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘லுமி’ (Lumi) பாதுகாப்பு அங்கி பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோடைக்காலம் முதல் பயன்பாட்டிற்கு வந்த இந்த அங்கியின் ஜிப்பர் (Zipper) அமைப்பு மற்றும் அளவு காரணமாக, குழந்தைகளால் மற்றவர்களின் உதவியின்றித் தாங்களாகவே இதனை அணிய முடியவில்லை எனவும், குளிர்கால தடிமனான ஜாக்கெட்டுகளுக்கு மேல் அணிவது மிகவும் சிரமமாக உள்ளதாகவும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பிலிருந்து புகார்கள் குவிந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, ‘டூரிங் கிளப் சுவிட்சர்லாந்து’ (TCS) அமைப்பு இந்த அங்கியை மறுவடிவமைப்பு செய்ய முடிவு செய்துள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஜிப்பருக்குப் பதிலாக முன்பக்கத்தில் ‘வெல்க்ரோ’ (Velcro) ஒட்டும் வசதியும், பக்கவாட்டில் அளவை மாற்றியமைக்கும் வசதியும் சேர்க்கப்படவுள்ளன.
இருப்பினும், புதிய பாதுகாப்புத் தரநிலைகளுடன் கூடிய இந்த மறுவடிவமைப்பு செய்யப்பட்ட அங்கிகள் 2027–28 கல்வி ஆண்டிலேயே பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, புதிய அங்கி உருவாக்கத்தில் தங்களது நேரடி அனுபவங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, சூரிச், செயின்ட் காலன், கிராபுண்டன் மற்றும் சோலோதூர்ன் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து TCS-க்கு அறிக்கை தயார் செய்து வருகின்றன.
NEWS SOURCE – bluewin.ch
IMAGE – AI GENERATE



