Local Swiss News

அழகு சிகிச்சையா? அங்கீகரிக்கப்படாத மருத்துவ சிகிச்சையா? வின்டர்தூரில் பெண் ஒருவர் மீது விசாரணை

1301892777125879

அழகு சிகிச்சையா? அங்கீகரிக்கப்படாத மருத்துவ சிகிச்சையா? வின்டர்தூரில் பெண் ஒருவர் மீது விசாரணை

வின்டர்தூரில் உள்ள ஒரு நக அழகு நிலையத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், பெருமளவிலான தடைசெய்யப்பட்ட மற்றும் மருத்துவப் பயன்பாட்டுக்குரிய பொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை காலை, சூரிச் மாகாண காவல்துறையினர் பொருளாதார விவகாரங்களுக்கான அலுவலகத்துடன் இணைந்து, உந்தெரர் கிராபனில் அமைந்துள்ள நகப்பூச்சு நிலையத்தில் வணிக ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

அப்போது, தடைசெய்யப்பட்ட மூலப்பொருள் அடங்கிய நகப்பூச்சுகள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து, நிலையத்தின் அடித்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனையில் அதிகாரிகளுக்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் பொருட்கள் சிக்கின.

1301892777125879

100-க்கும் மேற்பட்ட ஊசிகள், பல நூறு ஊசி மருந்துகள், போடோக்ஸ் தயாரிப்புகள், 100-க்கும் மேற்பட்ட ஹையலூரோனிக் அமிலப் பொருட்கள் மற்றும் சுமார் 2,800 நகப்பூச்சுகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இரண்டு லேசர் கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையத்தை நடத்தி வந்த 39 வயதான சுவிஸ் பெண் ஒருவர், தேவையான தகுதிகள் மற்றும் அனுமதிகள் இன்றி மருத்துவ மற்றும் அழகு சிகிச்சைகளை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைக்காக மண்டல போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையமும் விசாரணையில் இணைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரச் சட்டம் மற்றும் போதைப்பொருள் சட்டத்தின் பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக, குறித்த பெண் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் முன்னிலையில் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு சாதாரண நக அழகு நிலைய சோதனை… இவ்வளவு பெரிய அளவிலான மருத்துவ மற்றும் அழகு சிகிச்சைப் பொருட்கள் சிக்கியிருப்பது தற்போது வின்டர்தூரில் கவனத்தை ஈர்த்துள்ளது.