Local Swiss News

சவாரிகள் முடக்கம்… மின்வெட்டு… ஜெனரேட்டரில் தீ! கார்டாலண்டில் சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி!

சவாரிகள் முடக்கம்… மின்வெட்டு… ஜெனரேட்டரில் தீ! கார்டாலண்டில் சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி!

சவாரிகள் முடக்கம்… மின்வெட்டு… ஜெனரேட்டரில் தீ! கார்டாலண்டில் சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி!

இத்தாலியின் பிரபலமான கார்டாலண்ட் பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்ற சூரிச்சைச் சேர்ந்த குடும்பம், தங்களது பயணத்தை மறக்க முடியாத ஒரு மோசமான அனுபவமாக மாறியதாக தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 7ஆம் தேதி, கணவர் மற்றும் நான்கு வயது மகளுடன் கார்டாலண்ட் சென்ற 34 வயது தாய், நுழைவுச்சீட்டுகளுக்காக சுமார் 160 சுவிஸ் பிராங்குகள் செலுத்தியிருந்தார்.

ஆனால் காலை முதலே பல பொழுதுபோக்கு சவாரிகள் மீண்டும் மீண்டும் செயலிழந்ததால், குடும்பத்தின் எதிர்பார்ப்பு ஏமாற்றமாக மாறியது.

சுமார் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியதால், அவர்கள் லெகோலேண்ட் நீர் பூங்காவிற்குச் சென்றனர்.

அங்கும் ஒரு நீர்ச்சறுக்கு இயங்காததால் சுமார் 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பின்னர் தங்களது பொருட்களை எடுக்க லாக்கருக்குச் சென்றபோது, மின்சாரம் தடைபட்டிருந்தது.

இதனால் மின்னணு முறையில் பூட்டப்பட்ட லாக்கரைத் திறக்க முடியவில்லை. அதற்குள் அவர்களது ஆடைகள், தனிப்பட்ட பொருட்கள் மற்றும் குடிநீரும் இருந்ததாக குடும்பம் கூறுகிறது.

நான்கு வயது குழந்தையுடன் இருந்ததால், தண்ணீர் வாங்குவதற்காக வெளியே செல்ல அவர்கள் முயன்றனர்.

ஆனால் நீச்சல் உடையில் வெளியே செல்ல முடியாது என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சுமார் 40 நிமிடங்கள் குடிநீரின்றி அங்கேயே காத்திருக்க வேண்டியதாக அந்தத் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

17A 6

இதற்கிடையே பிரதான பூங்காவிலும் பல முக்கிய சவாரிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்தன.

 

மின்சார ஏற்ற இறக்கங்களை சமாளிக்க பயன்படுத்தப்பட்ட வெளிப்புற ஜெனரேட்டர்களில் ஒன்றில் பின்னர் சிறிய தீ விபத்தும் ஏற்பட்டதாக கார்டாலண்ட் தெரிவித்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக, அந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதையடுத்து, குடும்பம் செலுத்திய பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளது.

ஆனால் கார்டாலண்ட் பணத்தைத் திருப்பித் தருவதற்குப் பதிலாக, 2027 செப்டம்பர் வரை பயன்படுத்தக்கூடிய மாற்று பயணச்சீட்டுகளை வழங்கியுள்ளது.

எனினும், “இந்த அனுபவத்துக்குப் பிறகு மீண்டும் கார்டாலண்ட் வர விரும்பவில்லை; பணத்தைத் திருப்பித் தர வேண்டும்” என குடும்பம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button