“பல மீட்டர் உயரத்திற்கு தீப்பிழம்பு… ஷ்விட்ஸில் பரபரப்பு!”
"பல மீட்டர் உயரத்திற்கு தீப்பிழம்பு... ஷ்விட்ஸில் பரபரப்பு!"

“பல மீட்டர் உயரத்திற்கு தீப்பிழம்பு… ஷ்விட்ஸில் பரபரப்பு!”
“சுவிட்சர்லாந்தின் ஷ்விட்ஸ் மாகாணத்தில் உள்ள ஓபரார்த் Oberarth பகுதியில் நேற்று மதியம் அதிர்ச்சிகரமான தீ விபத்து ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல கோடி மதிப்புள்ள லம்போர்கினி அவென்டடோர் எஸ்.வி.ஜே. Aventador SVJ Feuerசூப்பர் கார், எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் திடீரென தீப்பிடித்து முழுமையாக எரிந்து நாசமானது.
நீல நிற லம்போர்கினியின் பின்புறத்தில் இருந்து திடீரென பல மீட்டர் உயரத்திற்கு தீப்பிழம்புகள் சீறிப் பாய்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். கரும்புகை வானத்தை மூடியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
அந்த நேரத்தில் எரிபொருள் நிரப்ப வந்திருந்த பத்திரிகையாளர் கியூசெப்பே லி பிரா, இந்த சம்பவத்தை நேரில் கண்டு காணொளியாக பதிவு செய்துள்ளார். அவரது வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தகவல் கிடைத்தவுடன் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக கார் ஓட்டுநர் தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் வாகனத்திற்குள் இல்லை.

எனினும், உள்ளூர் தகவல்களின்படி குறைந்தது ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அவரை மீட்க ரெகா வான்வழி ஆம்புலன்ஸ் சேவை அவசரமாக அழைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் லம்போர்கினி கார் முற்றிலும் எரிந்து நாசமானதுடன், எரிபொருள் நிரப்பும் பம்பும் சேதமடைந்துள்ளது. சொத்து சேதத்தின் மொத்த மதிப்பு மற்றும் தீ விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து காவல்துறையினர் மற்றும் நிபுணர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எரிபொருள் நிலையம் போன்ற மிகவும் ஆபத்தான இடத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம், சில நிமிடங்களில் பெரும் விபத்தாக மாறியிருக்கக்கூடிய சூழ்நிலையை நினைவூட்டியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் என்ன? தொழில்நுட்பக் கோளாறா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கேள்விகளுக்கு அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.





