Swiss News In Tamil

கிளாருஸில் அழகு நிலையத்தில் திருட்டு – 16 வயது இளைஞர் கைது

கிளாருஸில் அழகு நிலையத்தில் திருட்டு – 16 வயது இளைஞர் கைது

கிளாருஸில் அழகு நிலையத்தில் திருட்டு – 16 வயது இளைஞர் கைது

கிளாருஸ் (Glarus) பகுதியில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துக்குப் பிறகு தப்பிச் சென்ற சந்தேகநபர்களை போலீசார் துரத்திச் சென்ற நிலையில், 16 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இடம்பெற்றதாக Kantonspolizei Glarus தெரிவித்துள்ளது.

பொதுமக்களிடமிருந்து வந்த தகவலின்படி, அழகு நிலையத்தில் திருட்டு இடம்பெற்றதுடன், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கார் ஒன்றில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, போலீசார் நேபிள்ஸ்  (Näfels) பகுதியில் சந்தேக வாகனத்தை கண்டுபிடித்து துரத்திச் சென்றனர்.

சிறிது நேரத்தில், அந்த வாகனம் வயல்வெளி பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

N2a

பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சூரிக் கன்டோனில் வசித்து வந்த 16 வயதுடைய அல்ஜீரிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஆனால், வாகனத்தில் இருந்த மற்ற சந்தேகநபர்கள் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எத்தனை பேர் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

திருடப்பட்ட பொருட்களின் மதிப்பும் ஏற்பட்ட சேதத்தின் அளவும் இன்னும் கணக்கிடப்படவில்லை.

இந்த வழக்கின் மேலதிக விசாரணைகளை Kantonspolizei Glarus மற்றும் கிளாருஸ் அரசு மற்றும் இளைஞர் வழக்கறிஞர் அலுவலகம் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button