Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்.!

சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்.!

சுவிட்சர்லாந்தில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக பாசல் மற்றும் ஆர்காவ் பகுதிகளில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக நில அதிர்வுகளை அளவிடும் சேவை மையம் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில்

மேலும் ஜேர்மனியில் உள்ள Laufenburg நகருக்கு வடக்கே 18 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியை சுவிஸ் நில அதிர்வு ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது.

சூரிச்சிலிருந்து சுவிஸ் நில அதிர்வு சேவை அறிக்கையின்படிஇ ஜெர்மனியில் இரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தாக்கமே சுவிட்சர்லாந்திலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் அதிகாலை 3:06 நிமிடம் அளவில் ஏற்பட்டது. ‘இந்த நிலநடுக்கம் சுவிட்சர்லாந்து முழுவதும் பல பகுதிகளில் உணரப்பட்டிருக்கலாம்’ என்று நிலநடுக்க சேவை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் தொடர்பில் சுமார் 1200 பதிவுகள் கிடைத்துள்ளதாகவும்இ பல்வேறு நபர்களும் நிலநடுக்கம் தொடர்பில் தகவல் வழங்கியுள்ளனர் எனவும் அது தெரிவிக்கின்றது..

Related Articles

Back to top button