Rapperswil-Jona பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் படுகாயம்
சென்ட்காலன் மாகாணம் Rapperswil-Jona பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உட்பட மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் Rapperswil – சென்டகாலன் வீதியில் ( St.Gallerstrasse) இடம்பெற்றுள்ளது.

17 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் Pfäffikon நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, வீதி மின்விளக்கு சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது. குறித்த இளைஞன் நிறுத்தாமல் செல்லவே, பாதசாரி கடவையில் வீதியை கடந்த 69 வயதுடைய பெண் மீது மோதியுள்ளார்.
இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த பெண் உடனடியாக அம்புலன் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Quelle: Kantonspolizei St.Gallen
Bildquelle: Kantonspolizei St.Gallen





