Swiss News In Tamil

சுவிஸில் காலநிலை மாற்றத்தினால் 207 மரணங்கள்

இந்த கோடையில் ஐரோப்பிய நகரங்களில் ஏற்பட்ட வெப்ப அலை காரணமாக சுமார் 16,500  கூடுதல் மரணங்கள் பதிவாகியுள்ளதாக பிரிட்டன் ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதில் சுமார் 200 பேர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வு இம்பீரியல் கல்லூரி லண்டன் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் & டிராபிகல் மெடிசின் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டது.

ஆய்வு செய்யப்பட்ட 854 நகரங்களில் வெப்பத்தால் ஏற்பட்ட மரணங்களில் சுமார் 68% காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டவை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும், பல வெப்ப தொடர்பான மரணங்கள் பதிவு செய்யப்படாமல் போகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

N4

இந்த கோடையில் மட்டும் ரோம் – 835, அதென்ஸ் – 630, பாரிஸ் – 409 வெப்ப தொடர்பான மரணங்கள் நேரடியாக காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையவை என ஆய்வு தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் 12 நகரங்களில் 207 மரணங்கள் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதாக கணிக்கப்பட்டுள்ளது. இதில் சூரிச் – 49, பேர்ன் – 33, ஜெனீவா – 29, பேசல் – 27 பேர் என மரணங்கள் பதிவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

© TamilNews

Related Articles

Back to top button