Swiss News In Tamil

சுவிஸில் ஒரே டிக்கட்டில் விமான மற்றும் ரயில் சேவை

சுவிஸில் ஒரே டிக்கட்டில் விமான மற்றும் ரயில் சேவை ஜெனிவாவில் விமானம் மற்றும் ரயில் ஆகியவற்றில் பயணம் செய்வதற்கு ஒரே டிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சுவிஸ் விமான சேவை நிறுவனமும் சுவிட்சர்லாந்து ரயில்வே சேவை நிறுவனம் இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. விமான மற்றும் ரயில் சேவைகளை ஒன்றிணைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் விமான சேவை விமானத்தில் பயணிக்கும் பயணிகள் தங்களது டிக்கெட் அல்லது போர்டிங் பாஸ்களை ஜெனீவா விமான நிலையத்திற்கான ரயில் சேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸில், டிக்கட்டில், விமான மற்றும் ரயில் சேவை, ஜெனிவா

ஏற்கனவே இவ்வாறான ஒரு சேவை சூரிச் விமான சேவை நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி சுவிஸ் விமான சேவை விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் லாவுசன் மற்றம் பேர்ன் ஆகிய பகுதிகளில் இருந்து இலகுவாக ரயிலில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த முறைமையின் ஊடாக சூரிச் ஜெனிவா ஆகிய விமான நிலையங்களை இலகுவில் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி ஜெனிவாவிற்கு விமானம் ஊடாக பயணிக்கும் ஒருவர் இலகுவில் ரயில் மூலம் ஏனைய நகரங்களுக்கு போக்குவரத்து செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button