Swiss News In Tamil

கிளாரஸ் நீடெரூர்னென் நகரில் கார் ஒன்றில் திருட முற்பட்ட மர்மநபர்

கிளாரஸ் நீடெரூர்னென் நகரில் கார் ஒன்றில் திருட முற்பட்ட மர்மநபர்

கன்டோன் கிளாருசில் ( Canton Glarus), ஜூன் 21ஆம் தேதி சனிக்கிழமை இரவு சுமார் 9:30 மணியளவில், நீடெரூர்னென் நகரில் பஹ்ன்ஹோஃப்‌ஸ்ட்ராஸ்ஸே (Bhanhofstrasse) பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மென்ட் கட்டிடத்தின் டீப்கரேஜில் நிறுத்தப்பட்டிருந்த காரில் யாரோ நுழைந்து காரில் உள்ள பொருட்களை குழப்பி எதையோ தேடியுள்ளாதாக அதன் உரிமையாளர் அறிந்துகொண்டார்.

காரின் கதவுகளில் உடைக்கும் தடயங்கள் எதுவும் காணப்படாததால், இது ஒரு எலக்ட்ரானிக் சாதனத்தின் உதவியுடன் திறக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

IMG 2003 1536x1152 1

இவ்வழக்கில் திருடப்பட்டதாக எதுவும் பதிவாகவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இருந்தும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

பொதுமக்கள் தங்களுடைய வாகனங்களை பாதுகாப்பான முறையில் பூட்டி வைக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான எந்த நடவடிக்கையும் கவனித்தால் உடனடியாக போலீசாருக்கு தகவலளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

@Kapo GL

Related Articles

Back to top button