Swiss News In Tamil

சுவிஸில் ஜெனீவா, சூரிக் கன்டோன்களில் பாலியல் நோய் பரவல் தீவிரம்

சுவிஸில் ஜெனீவா, சூரிக் கன்டோன்களில் பாலியல் நோய் பரவல் தீவிரம்

சுவிஸில் பாலியல் வழி பரவும் தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புதிய சுவிஸ் கூட்டாட்சி சுகாதார அலுவலக தரவுகள் காட்டுகின்றன. ஜெர்மன் தளமான எரோபெல்லா வெளியிட்ட புதிய STI Index Switzerland படி, ஜெனீவாவும் சூரிக்கும் இந்த ஆண்டு அதிகமான பாலியல் நோய் (HIV, Syphilis, Gonorrhoe, Chlamydien) பதிவுகளுடன் முதலிடம் பிடித்துள்ளன. நகர்ப்புறங்களில் இந்த நோய்களின் பரவல் குறிப்பிடத்தக்க வகையில் அதிகம் உள்ளது.

ஜெனீவா 377 என்ற உயர்ந்த மதிப்புடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சூரிக் மிகச் சற்றே குறைவான 369 மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. பாலியல் நோய்கள் அதிகம் பதிவாகும் பகுதிகளில் பாசல்-ஸ்டாட் மூன்றாவது இடத்தில் உள்ளது. குறைந்த பதிவுகள் உள்ள கண்டோன்களில் அபன்செல் இனர் ரோடன், ஒப்வால்டன், லிச்சென்ஸ்டெய்ன் முன்னிலையில் உள்ளன. ஊரி மிகவும் குறைந்த 87 மதிப்புடன் இறுதியில் உள்ளது.

சுவிஸில் ஜெனீவா, சூரிக் கன்டோன்களில் பாலியல் நோய் பரவல் தீவிரம்

எரோபெல்லா நடத்திய 2000 பேரை கொண்ட ஆய்வில், 57 சதவீதம் பேர் எப்போதும் பாதுகாப்பான பாலியல் பழக்கத்தைப் பின்பற்றுவதாக கூறினாலும், நான்கில் ஒருவரான 24 சதவீதம் பேர் சில நேரங்களில் மட்டுமே பாதுகாப்பு பயன்படுத்துவதாகவும், 12 சதவீதம் பேர் ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

நிபுணர்கள், நகரங்களில் அதிக சமூக தொடர்புகள், விழிப்புணர்வு குறைவு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் போன்றவை இந்த உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் என எச்சரிக்கின்றனர். சுவிஸில் பாலியல் நோய்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சோதனை, பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு மிகத் தேவை  என வலியுறுத்துகின்றனர்.

© 20min

Related Articles

Back to top button