Rapperswil – Jona நகரத்தில் மின்சார பேரூந்துகள் சேவையில்
Rapperswil – Jona நகரத்தில் மின்சார பேரூந்துகள் சேவையில் சுவிட்சர்லாந்தில் பல்வேறு நகரங்களில் மின்சார பயணிகள் பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டாலும் பல்வேறு நகரங்களின் இன்னும் எரிபொருளில் இயங்கும் பேரூந்துகளே பாவனையில் உள்ளன.
கடந்த ஆண்டுகளில் பல்வேறு நகரங்கள் இலத்திரனியல் பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த ஆரம்பித்துள்ளன. அந்த வரிசையில் சென்ட்காலன் கன்டோனின் ராப்பர்ஸ்வில் நகரிலும் தற்போது முதன்முறையாக மின்சார பேரூந்து ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இச்சேவை ராப்பர்ஸ்வில் மற்றும் யொனா நிலையத்துக்கான சேவையில் ஈடுபடுகின்றது. முதற்கட்டமாக இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் எதிர்வரும் காலங்களில் கட்டம் கட்டமாக இன்னும் பல மின்சார பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த சேவை நேற்று முன்தினமான 19 ம் திகதிமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





