Swiss News In Tamil
Bülach ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு : பல ரயில்கள் தாமதம்
Bülach ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு : பல ரயில்கள் தாமதம்
Bülach ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு : பல ரயில்கள் தாமதம் இன்று திங்கட்கிழமை மாலை, Bülach ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரயில் தாமதங்கள் ரயில் ரத்துக்கள் மற்றும் பாதை மாற்றங்கள் போன்றவை இடம்பெறலாம் என ரயில்வே ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளது.

குறித்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக IC, RE48, S3, S9, S36 மற்றும் S41 ரயில் சேவைகள் பாதிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
மேலும் குறித்த அறிவுப்புகளில் மாற்று பேரூந்துகளுக்கான தகவல்களும் வழங்கப்பட்டன ஆனால் அவை எப்போது வரும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த பிரச்சினை இரவு 7 மணி வரை நீடி த்திருந்ததாகவும் அறியமுடிகிறது.





