Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் மது சார்ந்த சாலை விபத்துகள் அதிகரிப்பு: 33 பேர் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தில் மது சார்ந்த சாலை விபத்துகள் அதிகரிப்பு: 33 பேர் உயிரிழப்பு

கடந்த ஆண்டில் சுவிட்சர்லாந்தில் மது அருந்தி வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 32% அதிகம் என்று TCS வெளியிட்ட புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

30 முதல் 39 வயதுக்கிடையிலான ஓட்டுநர்களே மிக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வயது குழுவில் ஒன்பது மரணங்கள் பதிவாகியுள்ளது. 50 வயதினருக்கு எட்டு, 20, 40 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தலா ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன. 20 வயதுக்குக் குறைவானவர்களில் ஒரு மரண விபத்து மட்டுமே நடந்துள்ளது.

N5 4

கண்டோன் வாரியாக, வெளட் கன்டோனில் ஐந்து மரண விபத்துகள் பதிவாகி முதலிடத்தில் உள்ளது. டிசினோவில் நான்கு, வாலெஸ் மற்றும் சூரிக்கில் தலா மூன்று விபத்துகள் பதிவாகியுள்ளன. மொத்தத்தில், 16 கண்டோன்கள் குறைந்தது ஒரு மது சார்ந்த மரண விபத்தைப் பதிவு செய்துள்ளன.

விழாக்காலம் நெருங்கி வரும் நிலையில், TCS அமைப்பு ஓட்டுநர்களை மது அருந்திய பின்னர் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்குமாறு எச்சரித்துள்ளது. “சிறந்த இரவு என்பது பாதுகாப்பாக முடிவடையும் இரவுதான். மது அருந்தினால், மாற்று போக்குவரத்தைத் தேர்வு செய்யுங்கள்,” என TCS–இன் கிறிஸ்டோஃப் நைடெக்கர் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் அனைத்து சமூகத்தினரும் சாலைப் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, பொறுப்பான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

© 20min

Related Articles

Back to top button