Swiss News In Tamil

சோலோதர்ன் நகரம் : கண்காட்சியில் வெடிகுண்டு மிரட்டல் ..!!!

சோலோதர்ன் நகரம் : கண்காட்சியில் வெடிகுண்டு மிரட்டல் ..!!!

சோலோதர்ன் நகரம் : கண்காட்சியில் வெடிகுண்டு மிரட்டல் ..!!! புதன்கிழமை காலை, செப்டம்பர் 25, 2024 அன்று, சோலோதர்னில் நடந்த இலையுதிர் கண்காட்சி (HESO) தொடர்பான அநாமதேய வெடிகுண்டு மிரட்டலை சோலோதர்ன் கன்டோனல் காவல்துறையினர் எதிர்கொண்டனர்.

மிரட்டல் எதிரொலியாக போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். முன்னெச்சரிக்கையாக, விழா ஏற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துவிட்டு, போலீஸ் நாய்களைக் கொண்டு தீவிர சோதனை நடத்தினர்.

அதிர்ஷ்டவசமாக, சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. நிலைமையை மதிப்பீடு செய்த போலீசார், விழா ஏற்பாட்டாளர்களுடன் ஒருங்கிணைந்து, சிறிது தாமதமானாலும், கண்காட்சியை மீண்டும் திறக்க முடிவு செய்தனர்.

சோலோதர்ன் நகரம்

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, நிகழ்வில் பல ரோந்துப் பணிகளில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

அன்று பிற்பகலுக்குப் பிறகு, சோலோதூர்ன் கன்டோனல் போலீசார் அந்த பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் மிரட்டல் விடுத்த சந்தேக நபரை கைது செய்தனர். சந்தேகநபர் 72 வயதுடைய சுவிஸ் நபரொருவர்.

அவர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் வழக்குப்பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

© Kantonspolizei Solothurn

Related Articles

Back to top button