ஆர்காவ் A1 நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த ட்ரக் வாகனம்
ஆர்காவ் A1 நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த ட்ரக் வாகனம்
ஆர்காவ் A1 நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த ட்ரக் வாகனம் வெள்ளிக்கிழமை மாலை, ஆர்காவ் கன்டோன் நீடர்லென்ஸ் அருகே ஏ1 நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டிரக் தீப்பிடித்தது.
மாலை 6:30 மணியளவில் டிரக்கில் இருந்து புகை வருவதை மற்ற ஓட்டுநர்கள் கவனித்தனர், மேலும் ட்ரக் ட்ரைவரும் இதனை கவனித்து உடனடியாக ட்ரைக்கை வீதியில் அருகில் நிறுத்தியுள்ளார்.


இருப்பினும், தீப்பிழம்புகள் இன்ஜினிலிருந்து கேபின் மற்றும் லோட் கம்பார்ட்மென்ட்டுக்கு வேகமாக பரவி, சில நிமிடங்களில் டிரக்கை முழுவதுமாக சூழ்ந்து கொண்டது.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர், ஆனால் லாரி முற்றிலும் எரிந்து சாப்பலானது. மேலும் வெப்பத்தால் சாலை சேதமடைந்தது.
தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம் என சசந்தேகிப்பதாகவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.
(c) zueritoday





