Swiss News In Tamil

சூரிச்சில் திருட்டில் ஈடுபட்ட நபரால் போலீசார் மீது தாக்குதல் கைது..!

சூரிச்சில் திருட்டில் ஈடுபட்ட நபரால் போலீசார் மீது தாக்குதல் கைது..!

சூரிச்சில் திருட்டில் ஈடுபட்ட நபரால் போலீசார் மீது தாக்குதல் கைது..! நேற்று வியாழன் மதியம் ஒரு மனநலம் குன்றிய நபர் சூரிச் நகர காவல்துறை அதிகாரியை காயப்படுத்தியுள்ளதாக சூரிச் கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர்.

29 வயதான கேமரூனியன் இதற்கு முன்பும் இரண்டு பெண்களிடம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர் எனவும் தெரியவந்துள்ளது. அவர் இப்போது மருத்துவ கவனிப்பில் உள்ளதாக காவல்துறை இன்று அறிவித்துள்ளது.

குறித்த நபர் நேற்று மதியம் 12.30 அளவில் வழிப்போக்கரின் சன்கிளாஸை பிடிங்கயதோடு பின்னர் ட்ராம் வண்டியில் ஒரு பெண்ணிடம் இருந்து ஷூவையும் திருடியுள்ளார்.

சூரிச்சில்

சூரிச் நகர காவல்துறை உறுப்பினர்கள், வழிப்போக்கர்களின் உதவியால் திருட்டில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்தனர். அவர்கள் அந்த நபரை வெளியே அழைத்துச் சென்றதும் அங்கு கைகலப்பு ஏற்பட்டது.

அதில் அவர் ஒரு போலீஸ் பெண்ணை தரையில் தள்ளியதுடன் அவரது சக ஊழியர்களின் முகத்தில் தாக்குதல் நடத்தினார். பின்னர் பொலிஸ் அதிகாரி காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இறுதியில் 29 வயதான அந்த நபர் கைது செய்யப்படடார். அண்மையில் சூரிச் கன்டோனில் போலீசார் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button