Swiss News In Tamil

ஜெனிவா சர்வதேச மோட்டார் கண்காட்சிக்கு முற்றுப்புள்ளி

ஜெனிவா சர்வதேச மோட்டார் கண்காட்சிக்கு முற்றுப்புள்ளி

ஜெனிவா சர்வதேச மோட்டார் கண்காட்சி இனிமேல் நடத்துப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளாக இடம்பெற்று வந்த நிகழ்வை நிறுத்த ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

கோவிட் காலத்தில் ரத்து செய்யப்பட்ட குறித்த நிகழ்வு சில ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. பின்னர் குறித்த நிகழ்ச்சிக்கு உற்பத்தியாளர்கள் தயக்கம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டது.

ஜெனிவா

இந்த ஆண்டுக்கான மோட்டார் கண்காட்சி கடந்த மார்ச் மாதம் இடம்பெற்றிருந்தது. எனினும் கடந்த காலத்தை விட மிகவும் சிறியதாகவே நடைபெற்றது. இது பற்றி பல்வேறு தரப்பினரும் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button