Swiss News In Tamil

மருமகளுடன் தாகாத உறவு : சுவிட்சர்லாந்தில் பிரேசிலியருக்கு கிடைத்த தீர்பு

மருமகளுடன் தாகாத உறவு : சுவிட்சர்லாந்தில் பிரேசிலியருக்கு கிடைத்த தீர்பு

மருமகளுடன் தாகாத உறவு : சுவிட்சர்லாந்தில் பிரேசிலியருக்கு கிடைத்த தீர்பு சுவிட்சர்லாந்தில் வசிக்கும் பிரேசிலைச் சேர்ந்த ஒருவர் தனது 14 வயது மருமகளுடன் தகாத உறவு வைத்துக்கொண்டமைக்காக நீதிமன்றத்தினால் தண்டனைக்கு உள்ளாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் 2022 வசந்த காலத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த நேரத்தில் 29 வயதாக இருந்த ஒரு பிரேசிலிய மனிதனுக்கும் அவரது 14 வயது மருமகளுக்கும் இடையே பாலியல் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் குறைந்தது இரண்டு முறை இவ்வாறு தவறான உறவில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுபற்றி குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை மறுக்கவில்லை. ‘நான் அவளை வற்புறுத்தவில்லை என நீதிமன்றில் குற்றத்தை குறைக்க வாதிட்டார். இது தொடர்பான முதல்கட்ட விசாரணை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது.

மருமகளுடன் தாகாத உறவு

முடிவில் அவருக்கு நிபந்தனையுடன் கூடிய பன்னிரண்டு மாதங்கள் சிறைத்தண்டனையும் 120 நாட்களுக்கு தினசரி தலா 70 பிராங்குகள் அபராதமும் விதிக்கப்பட்டது . மேலும் அவர் நாட்டில் இருந்து ஐந்தாண்டு தடையும் பெற்றார்.

இருப்பினும் குற்றவாளியான பிரேசிலியர் தண்டனையை ஏற்றுக்கொண்டதோடு தனது தண்டனையை கணிசமாகக் குறைக்க விரும்பி உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார். எனவே இது தொடர்பான மற்றொரு விசாரணை சமீபத்தில் ஆராவ் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது.

எனினும் இவருடைய வழக்கு ‘ஒரு குழந்தையுடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பாக உள்ளமையினால இவருடைய மேன்முறையீடு எந்த பலனையும் அளிக்கவில்லை என்பதோடு
முன்பு இருந்த அதே தண்டனையே விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button