Swiss News In Tamil

சுவிஸ் ஆன்லைன் வர்த்தகம் 2023 இல் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

சுவிஸ் ஆன்லைன் வர்த்தகம் 2023 இல் சிறிதளவு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. வெளிநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆர்டர்கள் உட்பட வருவாய் 3 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 14 புள்ளி 4 பில்லியன் பிராங்குகளாக இருந்தது. வர்த்தக சங்கம், சுவிஸ் போஸ்ட் மற்றும் சந்தை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு 2022 இல் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட உதவியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சி எச் டொமைன்கள் வாங்குவதிலும் 2 வீத அதிகரிப்பைக் கண்டுள்ளது. வெளிநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆர்டர்கள் 10 வீதம் அதிகமாக இருந்துள்ளது. இது ஆசியாவில் இருந்து வரும் சிறிய பேக்கேஜ்கள் மூலம் கிடைத்துள்ளது. இவ்வகை பேக்கேஜ்கள் முக்கியமாக விமான சரக்கு மூலம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் ஆன்லைன் வர்த்தகம்

மேலும் முக்கியமாக இரண்டு துறைகள் தனித்து நிற்பதாக சொல்லப்பட்டுள்ளது. விளையாட்டு மற்றும் உணவு, போன்ற துறைகள் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அவற்றின் விற்பனை 6 வீதம் அதிகரித்துள்ளது.

மறுபுறம்இ ஃபேஷன் 7 வீத சரிவை சந்தித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டில் இதேபோன்ற வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நுகர்வோரpன் மேப்பாடுகள் பற்றி தெளிவாக காண நாம் 2025 வரை காத்திருக்க வேண்டும் எனவும் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

Related Articles

Back to top button