Swiss News In Tamil

30 வயது பெண் போலீசாருக்கு பல குற்றச்சாட்டுகள் – மூன்று ஆண்டு சிறைத்தண்டனை

30 வயது பெண் போலீசாருக்கு பல குற்றச்சாட்டுகள் – மூன்று ஆண்டு சிறைத்தண்டனை

வெளட் (Vaud) மாகாணத்தில் உள்ள நியோன் நீதிமன்றத்தில், 30 வயதான ஒரு பெண் போலீஸ் அதிகாரி 2018 முதல் 2021 வரை தனது சேவைக் காலத்தில் பல குற்றங்களைச் செய்ததாக புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அவர்மீது கொள்ளை குற்றங்கள் இடம்பெற்ற இடங்களில் இருந்து ஆபரணங்கள் மற்றும் கடிகாரங்களை திருடுதல், போலீஸ் ஆவணங்களை குடும்பத்தினருடன் பகிர்ந்தல், சட்டவிரோத அபராதங்கள் விதித்து பணத்தை தனிப்பயன்பாடு செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதனால் 11,000 முதல் 17,000 பிராங்க் வரை நிதி சேதம் ஏற்பட்டதாக குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது.

Nyon Polizistin wegen Diebstahl und Veruntreuung angeklagt

நீதிபதி, “நீங்கள் போலீஸ் நிறுவனத்திற்கும் உங்களை நம்பிய மக்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள்” எனக் கண்டித்தார். 6200 பிராங்க் நிகர மாத சம்பளம் பெற்ற அந்த பெண், “எனக்கு உண்மையில் பணம் தேவையில்லை. இது ஒரு திடீர் உந்துதல் (Impulses). தவறு என்று தெரிந்தும் என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை” என்று விளக்கமளித்தார்.

அரசு வழக்கறிஞர், இது பேராசை மற்றும் அதிகாரப் பெருமையால் நிகழ்ந்தது என வாதிட்டுள்ளார். அவருக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது., அதில் ஒரு ஆண்டு கட்டாய சிறை மற்றும் ஐந்து ஆண்டு போலீஸ் மற்றும் நீதித்துறையுடன் தொடர்பான பணிகளில் தடை விதிக்கப்படலாம். இறுதி தீர்ப்பு அடுத்த செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

@20min

Related Articles

Back to top button