சூரிச் ட்ராம் விபத்துக்கள் தொடர்பில் புதிய நடவடிக்கை.!!
சூரிச் ட்ராம் விபத்துக்கள் தொடர்பில் புதிய நடவடிக்கை.!! அண்மைக்காலமாக டிராம்களால் பாதசாரிகள் தாக்கப்படும் தொடர்ச்சியான விபத்துக்கள் அதிகரித்து வருகினறது. இதனால் சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படவேண்டும் என்ற விவாதம் ஆரம்பித்துள்ளது.
சூரிச்சின் உள்ளூர் துணை அதிகாரி மைக்கேல் ரோமக்னோலோ இதுபற்றி குறிப்பிடுகையில், ‘மக்கள் டிராம்களால் நசுக்கப்பட்டு இறக்கிறார்கள், இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்க முடியாது.’ என குறிப்பிட்டார்.

அதனால்தான் சூரிச்சின் பொதுப் போக்குவரத்து அமைப்பு அதன் சில வகையான ட்ராம்களில் ஏர்பேக்குகளை பொருத்தும் வேலையில் இறங்கியுள்ளது.
இந்த ஏர்ப்பேக்குகள் ஓட்டுநர் அறையின் முன்புறத்தில் அமைந்துள்ள சென்சார் மூலம் செயல்படுத்தப்படும். பாதசாரிகள் அல்லது சைக்கிள் ஓட்டுனர் மீது மோதும்போது தாக்கத்தை பெருமளவு குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில், சூரிச் நகரில் ஒரு வாரத்திற்குள் ட்ராம் விபத்துகளில் பலர் படுகாயம் அடைந்துள்ளதோடு மூவர் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





